கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

*பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்

Sunday, November 15, 2009

பாலஸ்தீன எதிர்ப்பு இசை -அஹமட் ஹபீப் தமிழாக்கம்: டிசே தமிழன் திரைப்பட இயக்குநரும், நெறியாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகின்றார். பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிக்கனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புக்களில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கின்றது....

எதிர்ப்பே வாழ்வாய்...

Saturday, October 31, 2009

-Aimee & Jaguar ஜேர்ம‌னிய‌த் திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து- ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்வும் அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்கின்ற‌ கால‌த்தையும், இருக்கின்ற‌ ச‌மூக‌ங்க‌ளையும் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. எல்லா நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும் ந‌ம்மால் எப்ப‌டி ப‌ய‌ணிக்க‌ முடியாதோ, அவ்வாறே ந‌ம்மால் எல்லோருடைய‌ வாழ்வையும் வாழ்ந்து பார்க்க‌வும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைக‌ளையும்,...

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

Tuesday, October 06, 2009

1. நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின் ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும் ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்... க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும் தம்மோடு மூடிக்கொண்டு துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌ 'எல்லாமும்' இருக்கின்ற‌ யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில் சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்... த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள் புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம்...

சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்

Wednesday, September 02, 2009

உல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒரு க‌வித்துவ‌மான‌...

த‌மிழ் முகாங்க‌ள் - NY Times, Editorial

Friday, July 17, 2009

த‌மிழ்ப்புலி கெரில்லாக்க‌ளை வெற்றி கொண்ட‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்டு இர‌ண்டு மாத‌ங்க‌ளின் பின்னும், இல‌ங்கை அர‌சாங்க‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளை இன்ன‌மும் 'ந‌ல‌ன்புரி கிராம‌ங்க‌ள்' என‌ப்ப‌டும், ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இராணுவ‌ விசார‌ணை முகாங்க‌ளாய்த் தெரிகின்ற‌ இட‌ங்க‌ளில் த‌ங்க‌வைத்திருக்கின்ற‌து. மிக‌வும் கோரமான‌ போரின் இறுதிக்க‌ட்ட‌த்தில்...

என‌க்குத் தெரிந்த‌ முருகைய‌ன்

Sunday, July 12, 2009

('முருகைய‌னின் வாழ்வும் நினைவும்' நிக‌ழ்வில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரை) 1. இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி...

*xxxxxxxxx

Thursday, July 09, 2009

-மீள்ப‌திவு 1. உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய்...

வாசிப்பும், சில‌ குர‌ல்க‌ளுக்கான‌ எதிர்வினையும்

Monday, June 01, 2009

பொ.கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' தொகுப்பை முன்வைத்து... 1.  ந‌ம் எல்லோருக்குமே க‌தைக‌ளைக் கேட்ப‌து என்றால் பிடிக்கும். சிறுவ‌ய‌துக‌ளில் இருந்தே பாட்டிமார்க‌ள், தாய்மார்க‌ள் சொல்கின்ற‌ க‌தைக‌ளுக்கிடையில் நாம் வ‌ள‌ர்ந்துமிருப்போம். சிலர் த‌ங்க‌ள‌ க‌தைக‌ளை, த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ளோடு பேசிப் ப‌கிர்ந்துகொள்கின்றார்க‌ள். வேறு ப‌ல‌ரோ த‌ங்க‌ளுக்குள்ளேயே,...

'கால‌ம்' இத‌ழில் வெளிவ‌ந்த‌ க‌தை

Tuesday, May 26, 2009

ஹேமா அக்கா -இள‌ங்கோ 'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி. இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌கால‌த்தில் கூட‌, இப்ப‌டி அள்ள‌ அள்ள‌க்குறையாத‌...