நீண்டநாள் காணாமற் போயிருந்த புத்தரை இன்று மீண்டும் அவன் தனது கணனி மேசைக்கடியில் ஒளிந்திருப்பதைக் கண்டான். பனிக்காலம் தொடங்கி அறையெல்லாம் சில்லிட்டுக்கொண்டிருக்க புத்தர் நடுநடுங்கியபடி இருந்தார். காடு, மலை, மழை எல்லாவற்றையும் புறக்கணித்து நெடுந்தூரம் அலைந்து திரியும் புத்தர் இப்படிப் பயந்து ஒடுங்கியபடி அவனது அறைக்குள் இருந்ததற்கு இந்தப் பனிக்காலம் மட்டும் காரணமாயிருக்காது என்பது தெளிவாகப் புரிந்தது.
புத்தரை...
நீ இன்னும் அழவில்லை
In கவிதைகள்Friday, February 12, 2010
1.
நேசத்தின் கசப்பு
மரங்களில் துளிர்த்து
நிலவொன்று தன்னை
தீமூட்டிக் கொன்ற கரியவிரவொன்றில்
இத்தெருக்களின் விளிம்புகளில் தொலைந்திருக்கிறேன்
புராதனத்து மணத்தை
*வளாகத்துப் புறாக்கள் சிறகடித்து பரப்பிய
தேவாலயத்தின் வாசலில்
நாடற்றவனாகவும்
ஒருத்தியின் வெறுப்புக்குரியவனாகவும்
ஒருபொழுதில் கிடந்துமிருக்கிறேன்.
தன் மூதாதையர் நெய்துகொடுத்த
போர்வையைப் பகிர்ந்த பூர்வீகக்குடி
தங்களின் களவாடப்பட்ட நிலங்களின்மேல்
கட்டப்பட்ட...
'ஏலாதி' விருதிற்கான ஏற்புரை
In ஏலாதி இலக்கிய விருது, In நாடற்றவனின் குறிப்புகள்Monday, February 01, 2010
பொய்த்துப் போன பருவங்கள்
'...சிறுவர்கள்
தொலைந்துகொண்டிருக்கும் நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பது கூட
நம்மை நாமே சிதைத்து உருவழிப்பதுதான்...'
சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி ஓடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினமூன்று வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்குப் போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாகியிருந்தது. அவ்வப்போது 'சமாதானச் சூழல்' வந்து ஆகக்குறைந்தது தாம் வாழ்ந்த இருப்பிடத்தைப்...
Subscribe to:
Posts (Atom)