
இன்னொரு கவிதைத் தொகுப்பு றஷ்மியின் ‘ஈ தனது பெயரை மறந்து போனது’. இக் கவிதைத் தொகுப்பின் பெயரைப் போல முகப்பும் வித்தியாசமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இது றஷ்மியின் நான்காவது கவிதைத் தொகுப்பு. அநேக கவிதைகள் ஈழத்தில் நீண்டகாலமாய் நடந்த ஆயுதப் போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றன. எல்லாத் தரப்பின் மீதும் விமர்சனம் வைக்கப்படுகின்றது. ‘தோல்வி எழுதப்பட்டமை‘ கவிதை புலிகளை...