
1.
போர் எல்லோரையும் பாதித்துவிட்டுச் செல்கின்றது. யுத்தம் ஒன்று முடிந்தபின்னும் 'தோற்றவர்கள்' ஏன் நாம் தோற்றோம் எனத் தங்களுக்குள் கேள்விகள் கேட்பவர்களாகவும், 'வென்றவர்கள்' அவர்கள் ஈட்டிய வெற்றியின் வழிமுறை குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். யுத்தத்தினால் வெற்றிகொள்ளப்பட்டு பெறப்படும் 'சமாதானம்' குறித்து...