
அசோகமித்திரனின் '18வது அட்சக்கோட்டை' மூன்றாவதோ நான்காவதோ முறையாக இந்த வாரவிறுதியில் வாசித்து முடித்திருந்தேன். சில புனைவுகளை மீண்டும் வாசிப்பதற்கு எனக்கென சில காரணங்கள் இருக்கும். அசோகமித்திரனினது இந்த நாவலை திருப்பத் திரும்ப வாசித்துப் பார்ப்பதற்கு, அவர் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தை (நிஸாம் கால செகந்திரபாத்/ஹதராபாத்தின் இறுதிக்காலம்) விவரிப்பதற்கு எவ்வகையான...