
தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், இன்னொருமுறை தொகுப்பாக வாசித்தபோதும் அலுப்பில்லாது இருந்ததற்கு, தமிழ்நதியின் கதைகளுக்குள் இருக்கும் கவித்துவமான ஒரு நடை காரணமாயிருக்கக் கூடும். இதிலிருப்பவற்றில் முக்கிய கதைகளாக ‘நித்திலாவின் புத்தகங்கள்’,...