
‘உலக வரைப்படம் எங்கும்’ (All over the map) எனும் பயணப் புத்தகத்தை பத்திரிகையாளராக இருக்கும் 40 வயதான லோரா எழுதியிருக்கின்றார். தனித்திருக்கும் அவர், தனது வயதை ஒத்த மற்றவர்களைப் போல கணவன், பிள்ளை போன்ற உறவுகளுக்கு ஆசைப்பட்டு அதைத் தேடுகின்றதாய் இந்தப் பயண நூல் ஆரம்பிக்கின்றது. அவர் இதற்கு முன் அவரது முப்பதுகளில் விவாகரத்தாகி இத்தாலிக்குப் போய், அங்கு சந்திக்கும்...