
யுத்தமொன்று நிகழும்போது எப்போதும் உயிர் தப்புவது என்பதே பிரதான விடயமாக, நாளாந்தம் இருக்கும். ஆனால் அதேசமயம் வாழ்வின் மீதான பிடிப்பை இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விட்டுவிடாதிருக்க, அதுவரை கவனிக்கப்படாத பல விடயங்கள் அற்புதங்களாக மாறத் தொடங்கும். சிரியாவில் அரசு படை ஒரு பக்கம் தராயா என்னும் நகரை முற்றுகையிட, அதற்குள் அடிப்படை தீவிரவாத இயக்கங்கள் தோன்றி...