
அஜிதன் எழுதிய 'மைத்ரி'யை நேற்றிரவு வாசித்து முடித்திருந்தேன். ஒரு புதிய எழுத்தாளரின் நாவல் என்ற வகையில் கவனிக்கத்தக்கது, ஆனால் அதேவேளை தமிழில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு படைப்பு என்று சொல்ல என் வாசிப்பு துணியாது. வழமையாக எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களில் எஸ்.ரா தனது முன்னுரையை எழுதி எங்களுக்கு அவரின் நாவலை வாசிக்கும் ஆர்வத்தைக் குறைப்பதுபோல இங்கு அஜிதன்...