கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழத்திலிருந்து சில கவிதைகள்

Sunday, February 27, 2005

பாம்பு நரம்பு மனிதன்-சோலைக்கிளிவலி தாங்கமுடியவில்லை.எனது கண்களை யாரோ ஒரு கல்லில் வைத்துஇன்னுமொரு கல்லால்தட்டுகின்றனர்.என் கண்ஒவ்வொரு நாளுமே கெடுகிறது.அது இருந்த இடத்தில்பாம்புகள் நுழைகின்றனஎனக்குள்.ஆம், என் நரம்புகளெல்லாம் இப்போது பாம்புகளா!ஒவ்வொரு நரம்பும்ஊர்வதைப் போலவும்,நெஞ்சைக்கொத்துதல் மாதிரியும்,உணர்கிறேன்.ஊரேநான் பார்க்கும் உலகேஎன் கண் தட்டும் மனிதரைவிழுங்கு!கையிலொரு பூவோடுபிறர் நெஞ்சைதடவிச் சுகம் கொடுக்கும் மானிடராய்மண்ணில் பிறக்கதவம்...

Cold Mountain: திரைப்படம்

Wednesday, February 23, 2005

{பார்த்ததும் பிறகு பதிந்ததும்} "நமக்கான காலம் போய்விட்டதைப் போலுள்ளது. யுத்தம் வந்து ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது..." -நட்சத்திரன் செவ்விந்தியன் இந்தக் கவிதை சொல்வதைப் போல அமெரிக்காவில் நடந்தாலென்ன ஈழத்தில் நடந்தாலென்ன போர் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டுத்தான் போகின்றது. யுத்தக்காலத்தை விட யுத்தத்தின் பின்பான காலங்கள்தான் இன்னும் கொடூரமாக இருக்கும் போலத் தெரிகிறது. Cold Mountain...

ரமேஷ்-பிரேம்: சில குறிப்புக்கள்

Monday, February 21, 2005

ரமேஷ்-பிரேமின் படைப்புக்களை சில வருடங்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் எழுத்து நடைக்குள் என்னால் புக முடியாது மூச்சுத்திணறி வெளியில் வந்து விழுந்திருக்கின்றேன். பிறகு அவர்களது கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல் என்று கொஞ்சம் பொறுமையாய் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் பிரதிகளை எப்படி வாசிப்பதென்ற இழை புரிபட வாசித்தல் இலகுவாயிற்று. சிலருக்கு சிலரது எழுத்தைக்கண்டவுடன் வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருப்பதுபோல் இன்றையபொழுதில் நானும்...

காதல் கவிதைகள்

Monday, February 14, 2005

முடிந்துபோன மாலைப்பொழுது -பா.அகிலன் பார்க்கிறோம்,விழி கொள்ளாத் துயரம்உதடுகள் துடிக்கின்றனதடுமாறி உயிராகும் வார்த்தைகளும்காற்றள்ளப் போய்த் தொலைகிறது...நேற்றுசணற்காட்டில் மஞ்சள் மெளனம்,இன்றுகண்களில் நீர்போகிறாய்மேற்கில்வீழ்ந்தணைகிறது சூரியன்.{பதுங்குகுழி நாட்கள்}நினைவுள் மீளதல்-தானா.விஷ்ணுஎப்போதுமே வந்து கொண்டிருக்கிறதுஉன்னைப் பற்றிய கனவுயாருமே வந்து போகாத பெருவெளிஒன்றில் இருந்துதூறல் நின்று போனமழை இடைவெளி நேரம் ஒன்றில்மீந்து வந்து கொண்டிருக்கும்பாடல்...

FEBRUARY 14

Sunday, February 13, 2005

*கல்யாண்ஜியின் கவிதைகுற்றவுணர்வுகள் ஏதுமில்லைசந்தோஷமாகவே இருக்கிறதுஆனாலும் அவள் என்கனவில் வந்ததைஇவளிடம் சொல்லமுடியவில்லைஇவளுக்கும் இருக்கலாம்குற்றவுணர்வுகள் அற்றசந்தோஷம் தந்தஎன்னிடம் சொல்ல முடியாதஇவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்இவளும் நானும்இருக்கின்றோம்சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.-கல்யாண்ஜி{அந்நியமற்ற நதி}*இந்தக் கவிதைக்கு தலைப்பில்லையெனினும் ஒரு குறிப்புக்காய் பெயரிட்டிருக்கின்றேன்...

மரணத்திலும் வாழ்ந்திருந்தோம்

Friday, February 11, 2005

{ஊர்: நினைவின் கருக்கலில்} என்னோடு படித்த நண்பனொருவனைப் பற்றிய செய்தியொன்றை விகடனில் சிலநாட்களுக்கு முன் வாசித்ததிலிருந்து, ஊர்பற்றிய ஞாபகங்கள் எனக்குள் விதையென ஊன்றி அரும்பி, கிளைத்து பரவத்தொடங்கிவிட்டது. அவனும் நானும், இன்னும் சில நண்பர்களும் ஊரில் செய்த குழப்படிகளும் கும்மாளங்களும் கணக்கிலடங்காதவை. நான் படித்த பாடசாலை எங்கள் வீட்டுக்கு மிக அருகில்தான் அமைந்திருந்தது. இரண்டு மணிகள் அடித்துத்தான் பாடசாலை ஆரம்பிக்கும். இரண்டுக்குமிடையில்...

சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சில அவதானங்கள்

Wednesday, February 02, 2005

புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களில் என்னை அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் யார் என்றால் ஷோபாசக்தியையும், சக்கரவர்த்தியையும் தயங்காமல் உடனே சொல்வேன். படைப்புக்களில் மட்டுமில்லாது அவர்களின் பிற செயற்பாடுகளாலும் என் கவனத்தை ஈர்ந்தவர்கள் இந்த இருவரும். சக்கரவர்த்தி, யுத்தசந்நியாசம் என்ற கவிதைத் தொகுப்பையும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். யுத்தத்தைத் தின்போம் என்ற மூன்று கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலும், இவரும்...

ஷோபாசக்தியின் 'கொரில்லா'

Tuesday, February 01, 2005

நாவலிருந்து சில பக்கங்கள் 5. குஞ்சன்வயல் கடக்கரையே ரெத்த வெடில் பிடிச்சுது. ஒவ்வொரு வாகனமாய் ஓடி ஓடி ரொக்கிராஜ் பிரேதங்களைப் பார்த்தான். அவனால நிலத்தில நிக்கக் கூட ஏலாமலுக்கு தலை சுத்தி அப்பிடியே ரோட்டில் இருந்திற்றான். குழந்தை, குஞ்சு, குருமான், ஆம்பிளையள், பொம்பிளையள் எண்டு எல்லாமாய் ஐம்பத்து சொச்சப் பிரேதங்கள். 6. எல்லோரையும் வெட்டித்தான் கொலை செய்திருக்கிறாங்கள். கையில்லாமல், காலில்லாமல், தலையில்லாமல், கைக்குழந்தையைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு...