நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

I'M ARMED AND I'M EQUAL

Wednesday, March 23, 2005

{Arular By M.I.A}

இந்தப்பொழுதில், இசையின் தூறல் மெலியதாய் கணணியில் கசிந்தபடியிருக்கின்றது. Metalic குரலும்,அற்புதமான beatsம் இணைந்த *மாயா அருட்பிரகாசத்தின் (a.k.a M.I.A) 'அருளர்' இசைத்தட்டு இதமாய் மனதை நனைக்க, இரவு இனிமையாக விரிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்டு, அகதியாய் அந்நியப்பட்டு, தனது சொந்தமண்ணைத் துறக்கவும் முடியாமல் அவதிப்படும் ஒரு பெண்ணின் வாழ்வு பின்னணியில் மங்கலாய்த் தெரிய, பாடல்கள் இன்னமும் நெகிழ்வூட்டுகின்றன.மாயா, திரைப்படம், ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட முறைசார் கல்வியை ஒரு கல்லூரியில் கற்று பட்டமும் பெற்றவர். பிறகு ஒரு இசைக்குழுவின் பயணத்தின்போது, அவர்களின் இசைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவுசெய்யப்போய், இசையின்பால் ஈர்க்கப்பட்டு இன்றொரு முக்கிய இசைக்கலைஞியாகிவிட்டார். 2003ல் முதல் முதலில் வெளிவந்த Galang பாடல்மூலம் பிரித்தானியாவிலுள்ள இரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். அந்தப்பாடல் குழுக்களின் வன்முறையை, "shot gun get down get down/ Too late you down, d-down" என்றும் "Don't let'em get to you if he's got 1 you get 2" எனவும் பாடுபொருளாக்குகிறது. ரேடியோக்கள், தொலைக்காட்சிகள் எதிலும் அதிகம் ஒளி/ஒலிபரப்படாதுவிட்டாலும், மாயாவின் பாடல் இணையத்தின் மூலம் மிக விரைவில் பிரபலமாகின்றது. இந்தியா, மேற்கிந்திய நாட்டவர்களின் நடன அரங்கங்களை இந்தப்பாடல் நிறைக்க, தனது முதல் single ஆல்பத்தை வெளியிடுகின்றார். பிறகு, பலரால் பாராட்டவும், விமர்சிக்கவும்பட்டதுமான பாடலான, Sunshowers பாடலை மாயா எழுதுகின்றார். இது ஒரு முஸ்லிம் தற்கொலைப் போராளியைப் பற்றிக்கூறும் பாடல். அதிகாரத்திற்கு எதிராக அறைகூவல்விடும் வரிகள் அதில் இருக்கின்றது. "You wanna go?/ You wanna war?/ Like P.L.O I don't surrender" என்றும் "Beat heart beat/ he's made it to the newsweek/sweet-heart seen it/he's doing it for the people" என்று இறந்துப்போகின்றவனை பரிகசிக்காமல், பரிவுடன் பார்க்கின்றார் மாயா. இந்தப்பாடலில் இடையில் எப்படி ஒருவர் முஸ்லிமாய் இருப்பதால் சித்திரவதை அனுபவிக்கிறார் என்று
"Semi-9 and snipered him
on that wall they posted him
they cornered him
and then they just murdered him

he told them he didn't know them
he wasn't there they didn't know him
they showed him a picture then:
"Ain't that you with the MUSILMS?"
எதற்கும் பயப்பிடாமல் தனக்கு நியாயமாய் தெரிவதை தன் பாடல்களில் மாயா முன்வைக்கின்றார்.

இந்த பாடல்களிலுள்ள கூர்மையான வசனங்களைப்போலவே, ஒருவிதமான காந்தக்குரலில் நன்றாகப் பாடவும் செய்கின்றார். இந்த இரண்டு பாடல்களும் கொடுத்த வரவேற்பினைப் பார்த்தபின் பலர் மாயாவின் ஒரு முழுத்தொகுப்பான இசைத்தட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்று விமர்சனங்களை வாசிக்கும்போது தெரிகின்றது. இடையில் அவருடைய b/f ஒருவர், தனது beatsயை மாயா திருடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டியதால் சென்ற ஆண்டே வரவேண்டிய தொகுப்பு, பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இப்போதுதான் வெளிவந்திருக்கின்றது.'அருளரில்' பதின்மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று skits (தமிழில் எப்படிச்சொல்வது?) தவிர்த்து பார்த்தால், பத்து முழுமையான பாடல்கள் இருக்கின்றன. இரண்டாம் பாடலான Pull up the peopleல், மிகவும் விமர்சிக்கப்பட்டதான, "I've got the bombs/ To make you blow" என்ற வரிகள் வருகின்றது. இதைவிட, "Every gun in a battle is a son and daughter too" என்றும், I'm a fighter/ fighter god என்றும் வருகின்றது. இதை பல விமர்சகர்கள் ஈழப்போராட்டத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படுத்தித்தான் எழுதியிருக்கின்றார்கள். மாயா ஒரு நேர்காணலில் கூறியது நினைவிற்கு வருகின்றது. ஈழப்போர், இந்தியாவில் அகதி முகாம் வாழ்க்கை என்ற பாதிப்பில் வெறுப்படைந்து, தான் முற்று முழுதாக ஒரு மேலைத்தேயத்துக்காரியாக மாறி பல வருடங்களாக இருந்ததாகவும், பிறகு, தன்னைப்போல அதிஸ்டமில்லாது போரிலிருந்து தப்பிவர முடியாத குழந்தைகளை நினைத்துப்பார்த்தபோதுதான் தனக்கு தனது வேரும் அடையாளமும் மிக அவசியம் என்ற உணர்வு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார். அதையேதான் ஒரு பாடலில், "I got brown skin/ but I'm a west Londoner,/educated but a refugee still..." என்று தன்னை உலகிற்கு பிரகடனப்படுத்துகின்றார். போரின்/வன்முறையின் பீதியை Bucky Done Gun என்ற பாடலின்,
"They're comin through the window
They're comin through the door
They're bustin down the big wall
And sounding the horn"
என்று மாயா சொல்கின்றார். ஆனால் இறுதியில், "I'm armed and I'm equal" என்று கதவை, சாளரத்தை, சுவரை உடைப்பவர்களைப் பார்த்து திருப்பிக்கேட்கவும் செய்கின்றார் (இன்னொருவிதமாய் பெண்ணிற்கெதிரான ஆணின் வன்முறையாகவும் இந்தப் பாடலை வாசிப்புச்செய்யலாம்). பத்து டொலர் பாடலில் intro தமிழில் வருகின்றது (கிட்டத்தட்ட தமிழ் பாடலைப்போலவே பின்னணியும் இருக்கின்றது). இந்தப்பாடல் ஒரு சின்னப் பெண்ணை, விலைமாதராக மாற்றும் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை எடுத்துக்கூறுகின்றது. பத்து டொலர் தந்தால் நீ என்னவும் செய்யலாம் என்று ஒரு விலைமாதின் ( "What can I get for ten dollar/ everything you want/anything you want") குரலாய் அந்தப்பாடல் ஒலிக்கின்றது. மேலைத்தேயத்தின் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ("Need a Visa? Got with a geezer/ Need some money/ Paid him with a knees-up") என்று நக்கலடிக்கவும் தவறவும் இல்லை.Hombre, Amazon ஆகிய இரண்டு பாடல்களும் காதலையும், காமத்தையும் பேசுகின்றன. Hombreல், "Take my number call me/I can get squeaky/So you can come and oil me/My finger tips and the lips/ Do the work yeah" என்று கிறங்கலாய் கூறினாலும், அமேசனில் ஒரு dating அனுபவத்தை வித்தியாசமாய் சொல்கின்றார். "When we shared raindrops/ That turned into lakes/Bodies started merging/And the lines got grey..." என்ற என்னைக் கவர்ந்த அழகான வார்த்தைகளும் அந்தப்பாடலில் இருக்கின்றது. இப்படிக் கிறங்கினாலும் இறுதியில், "Now I'm looking at him thinking/ May be he's ok" என்று ஆக உருகாமல் இயல்பாய்ச் சொல்வது இன்னும் பிடித்திருந்தது. காதலைப் பாடும் இந்தப்பாடலில் கூட "Palm tree silhouette smells amazing/blindfolds under home made lanterns/ somewhere in the amason/ they're holding me ransom" என்றும், காதலின் களிப்பில் கூட "I'll scream for the nation" என்று நம்மைப் போன்ற பலரைப் போலத்தான் இந்தப்பெண்ணிற்கும் சொந்தமண் ஞாபகம் வந்து, இப்படித்தான் பாடமுடிகின்றது.

பாடல்கள் மட்டுமில்லாது இந்த இசைத்தொகுப்பின் முன்பக்கத்தைக் கூட வித்தியாசமாய்த்தான் செய்திருக்கின்றார் (ஓவியத்தில் மாயாவிற்கு மிகவும் ஈடுபாடுண்டு, அவரது இணையத்தளத்தில் ஓவியங்களைப் பார்க்கலாம்). பாலஸ்தீனிய முஸ்லிம் மக்களை பிரதிபலிக்க அவர்களது மொழியைக் கொண்ட எழுத்துக்களும், இலங்கை தேசப்படமும், அதில் தமிழீழப்பிரதேசம் பிரிக்கப்பட்டும் காட்டப்படுகின்றது. இறுதியில் நன்றி கூறும்போது கூட Mom, Grandma என்று எழுதாமல், Amma, Ammamma என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, அவர் தமிழோடும் வாழவிரும்புகிறார் என்பதையும் தனது அடையாளத்தை மறைக்காமல் தனது இரசிகர்கள் முன் வெளிப்படையாக வைத்திருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லத்தான்வேண்டும்

மாயாவின் இந்த இசைத்தட்டு நன்றாகவிருந்தாலும், இது ஜரோப்பா, கீழைத்தேய சாயல் அதிகம் கலந்திருப்பதால், அமெரிக்காச் சூழலில் எப்படி (ஒரு விமர்சகர் சத்தம் அதிகமாய் இருப்பதாய் எழுதியிருந்தார்) ஏற்றுக்கொள்ளப்படும் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் யாரோ ஒருவர் கூறியதுமாதிரி, இந்தவருடத்தில் வெளிவந்த, அரசியலை நேரடியாகப்பேசும் இசைத்தொகுப்பு என்ற வகையில் அருளர் மிகவும் முக்கியமானது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். தமிழராய், தனது நாட்டில் மட்டுமில்லாது, கொங்கோ, பாலஸ்தீனியர் என்று உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்களுக்காயும், மனித இழப்புக்களுக்காயும் குரல் கொடுக்கும் மாயாவின் பரந்த மனதை நாமும் பாராட்டி அவரது பாடல்கள் நியாயத்திற்காய் என்றும் உரத்துக்குரல்கொடுக்கட்டும் என்று வாழ்த்துவோமுமாக.

இறுதியில், "You could be a follower,/ but who's your leader/ Break that circle, it could kill ya." என்று மாயா கூறும் இந்த வார்த்தைகளை உங்களினதும், எனதும் சிந்தனைக்குமாய் விட்டுச்செல்கின்றேன்.

{குறிப்புக்கள்: *மாயா என்று நான் எழுதியபோதும் அவர் தனது பெயரை மாயா என்றா அல்லது மியா என்றா உச்சரிக்கின்றார் என்பது சரியாகத் தெரியவில்லை. புகைப்படங்கள், இங்கிருந்து எடுக்கப்பட்டன. சாதாரண இசைத்தட்டுக்களின் விலையைவிட ஒன்றரை மடங்கு விலையிலும், குறைந்த நிமிடங்களிலும் (38 நிமிடங்கள் மட்டுமே) இருப்பதால், இளையவர்களால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கமுடியுமோ என்றொரு சந்தேகம் உள்ளது. நல்ல படைப்புக் கொடுத்துவிட்டும் அதை வெளியுலகத்திற்கு கொண்டுசெல்ல அவ்வளவு ஆர்வம் காட்டாத சோம்பலாயிருக்கும் ஈழத்தமிழரின் நிலை மாயாவிற்கு வராவிட்டால் சரி.}

8 comments:

Anonymous said...

பதிந்தது:ஈழநாதன்

இந்தப் பதிவுக்கு நன்றி டி.சே.மாயாவின் பாடல்கள் பற்றி நல்லதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறீர்கள்.நான் எழுதியது மிகவும் மேலோட்டமான பதிவாகத் தெரிகிறது


23.3.2005

3/23/2005 12:44:00 AM
Anonymous said...

பதிந்தது:மதி கந்தசாமி

டிஜே,

மான்ரியல் காசெட்டில் இவரைப்பற்றி ஆஹா ஓகோ என்று வந்தது. ஈழநாதனின் பதிவில் எழுதி வைப்போம் என்று பத்திரமாக வைத்த பேப்பரைத் தொலைத்துவிட்டேன். இப்போது இணையத்திலும் காணவில்லை.

சரி பரவாயில்லை - பழைய நேர்காண் ல் ஒன்று. இன்றுதான் வெளியிட்டிருக்கிறார்கள் போல.

http://www.pitchforkmedia.com/interviews/m/mia-05/

23.3.2005

3/23/2005 12:44:00 AM
Anonymous said...

பதிந்தது:டிசே

ஈழநாதன், மாயா பற்றிய நீங்கள் எழுதியதும் நல்ல பதிவே. பாடல்களை முழுமையாக கேட்கமுடிந்ததால், கொஞ்சம் விரிவாக என்னால் எழுத முடிந்தது. அவ்வளவே.
மதி, உங்களது இணைப்பிற்கு நன்றி. நான் அவசரமாய் மேலோட்டமாய் வாசித்திருந்தாலும், மாயாவின் ஆளுமையும், பன்முகமும் அதில் தெரிகின்றது.

23.3.2005

3/23/2005 11:02:00 AM
vinobha karthik said...

டி.சே,

நான் மேற்க்கத்திய இசை ரசிகன் கிடையாது. ஆனால் இவருடைய இசையை கேட்க வேண்டும் என்கிற ஆவல் மேலெழும்புகிறது. அல்லது வரிகளையாவது படித்துவிட வேண்டும் எனத் தோன்றுகிறது.

வினோபா.

3/23/2005 12:31:00 PM
Venkat said...

டி.சே நீங்கள் தந்திருக்கும் பாடகியின் இணையதளம் செயற்படவில்லை. இவரைப்பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை. ஆர்வமூட்டியிருக்கிறீர்கள். ஒரு முறை தெற்காசிய நிகழ்ச்சியொன்றில் இவரது பெயரை மியா என்று கேட்டதாக நினைவு. பாடல்களின் ஒரு வரி / ஒரு நிமிட முன்னோட்டம் எங்காவது கிடைக்கிறதா?

3/23/2005 04:47:00 PM
இளங்கோ-டிசே said...

வினோபா, வெங்கட்
Miaவின் இணையத்தளம் சில நாள்களுக்கு முன்னர்வரை இயங்கியபடியிருந்தது. அதில்தான் அவரது பாடல்களுக்கான samplesஜ கேட்டும், lyricsஐ வாசித்துமிருந்தேன். நேற்றுத்தான் வடஅமெரிக்காவில் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. Miaவின் தளம் under constructionல் நேற்றிலிருந்துதான் இருக்கிறது என்று நினைக்கின்றேன். பாடல் வரிகளை இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைப்பதாய் காணோம் (யாராவது தேடிக்கண்டுபிடித்தால் இங்கே பதிவுசெய்யவும்). ஆனால், இசைத்தட்டிலுள்ள மூன்று பாடல்களை இந்தத்தளத்திற்கு(http://www.npr.org/templates/story/story.php?storyId=4532506) நீங்கள் போனால் கேட்டு இரசிக்கலாம். குழந்தைகளுடன் கேட்கப்போகின்றீர்கள் என்றால் இந்த CD Parental Advisoryயுடன் வந்திருப்பதைக் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும்.

3/23/2005 06:38:00 PM
Anonymous said...

பதிந்தது:DJ

சென்ற பின்னூட்டத்தில் எழுதநினைத்து மறந்துபோனது.
வெங்கட்,M.I.A என்று அவரது MC பெயர் இருப்பதால், நீங்கள் சொல்வது போல மியா என்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் சரியென எனக்கும்படுகிறது. ஆனால் முழுப்பெயர், Maya Arulpiragasm என்றிருப்பதால், மாயா என்று அழைப்பதிலும் பிழையிருக்காது என்று நினைக்கின்றேன். நன்றி.

{Sorry i did posting this in the wrong place :-(}


24.3.2005

3/24/2005 03:50:00 PM
இளங்கோ-டிசே said...

மியாவின் புது வீடியோ அல்பத்தை இங்கே பார்க்கலாம். கரீபியன் தீவுகளின் பின்ன்ணியுடன் (கொடியில் காட்டப்படும் உருவம் பொப் மார்லியா? தெளிவாகத் தெரியவில்லை) படமாக்கப்பட்டுள்ளது. இசையில் தேர்ச்சி பெறுவதற்காய் மூன்று வருடங்களுக்கு மேலாக ஜமேக்காவில் மியா வசித்தவர் என்பதால் அல்பத்தில் வரும் பின்னணி குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மியாவின் தந்தையார் ஒரு பயங்கரவாதி; போராட்டங்களைக் குறித்துப் பாடுவது என்றால் சிறிலங்காவுக்குப் போய பாடவேண்டியது தானே என்று எழுதப்பட்ட இனத்துவேஷ காழ்ப்புணர்வு கொண்ட விமர்சனஙகளை மீறி மியா வளர்ந்துகொண்டிருகின்றார்.. அவரது இணைய தளத்துக்கு போய் tour schedules ஐ பாரத்தால் அவர் எவ்வளவு busy யாக இருக்கின்றார் என்பது புரியும். இங்கும் Much Music, Radio Stationsல் மியாவின் பாடல்கள் ஒளி/ஒலிபரப்படுவது மியா தவிர்க்கமுடியாத ஆளுமையாக இசை உலகில் பிரவேசித்துக்கொண்டிருக்கின்றார் என்பதற்கு உதாரணங்கள்.
....
மியா பற்றி அண்மையில் எழுதப்பட்ட இன்னொரு பதிவை இங்கே பார்க்கலாம்.

8/29/2005 12:11:00 PM