கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆட்டுக்குட்டிகளும், உதிர்ந்த சில பழுப்பு இலைகளும்

Monday, October 24, 2005

-டிசே தமிழன் அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல் நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து...

Thursday, October 20, 2005

சாத்தானின் காற்று நள்ளிரவை சிலுவையில் அறைய அதிர்கிறது பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள் ஓடி ஒளித்த நட்சத்திரங்களில் ஒன்றில் தேவாலயத்தை விட்டுத்தப்பியோடிய ஜீசஸும் தஞ்சம் கேட்டிருக்கலாம் போர்வையை விலத்த ஏறியிறங்கும் மார்புக்குவட்டுக்குள் கடந்தகாலத்தின் துயரநதி உறைந்துநிற்பது தெரிகிறது தொலைவில் பைன்மரக்காட்டுக்குள் வைரங்களைக்காவிச் செல்லும் ஒநாய்கள் தென்படுகின்றன பனிப்புகாருடன் ஒநாய்களைப் பின் தொடரத்தொடங்கி ஏழாவது நிமிடமும் இருபத்தைந்தாவது...

கொழும்பு: மலரும் சில நினைவுகள்

Tuesday, October 11, 2005

கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு, பாடாசாலை, ரியூசன்,...

Sunday, October 09, 2005

ஊரிலென்றால் மல்லிகைப்பூ வாசம் கமிழ்ந்தபடி இருந்திருக்கும் இந்தமாதத்தில். இரவைப் பனிமூடிக்கிடக்க விரல்களிலும் படிகிறது குளிர் நிழல்களைப்போல அசைந்தாடுகிறது கடந்தகாலத்தின் துயர் நினைவுகள் கொடூரமாய் தோற்கடிக்கும்போது அவசரம் அவசரமாக போர்வைக்குள் நுழைந்து MP3 Playerல் இசையைப் பரப்பி புத்தகங்களில் அமிழ்ந்துபோகலாம் அப்போது விரியத்தொடங்கும் இதுவரை அறியா உலகில் நடமாடுகின்றார்கள் மனிதர்கள்...