கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Thursday, October 20, 2005

சாத்தானின் காற்று
நள்ளிரவை
சிலுவையில் அறைய
அதிர்கிறது
பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள்

ஓடி ஒளித்த
நட்சத்திரங்களில் ஒன்றில்
தேவாலயத்தை விட்டுத்தப்பியோடிய
ஜீசஸும்
தஞ்சம் கேட்டிருக்கலாம்

போர்வையை விலத்த
ஏறியிறங்கும் மார்புக்குவட்டுக்குள்
கடந்தகாலத்தின் துயரநதி
உறைந்துநிற்பது தெரிகிறது

தொலைவில்
பைன்மரக்காட்டுக்குள்
வைரங்களைக்காவிச் செல்லும் ஒநாய்கள்
தென்படுகின்றன
பனிப்புகாருடன்

ஒநாய்களைப் பின் தொடரத்தொடங்கி
ஏழாவது நிமிடமும்
இருபத்தைந்தாவது முடக்கும்
தாண்டுகையில்
முயலில் மிருதுவுடன் கரமொன்று பற்றுகிறது
எலுமிச்சை வாசத்துடன்

இவளென்
துணையாகப்போகின்றவள் அல்லவாவென
அண்ணாந்து பார்க்கையில்
அம்மா அக்கா நண்பிகள்
அனைவரும் அறையப்பட்டிருக்கின்றனர்
சிலுவையில்

வைரங்கள் விழிகளாகி
வன்மமாய் மின்ன
இப்போது
ஒநாய்களின் பற்களில்
கோரமாய்த் தொங்குகின்றனர்
என்னில் பிரியம் வைத்திருந்தவர்கள்

'நீ
பேசியவை எழுதியவை விவாதித்தவை
எதுவுமே ஒன்றுக்கும் உதவாதவை
பார்த்தாயா,
ஒநாய்களாய் சித்திரவதைப்படுத்துவதும்
நீ மற்றும் நீ மட்டுந்தான்'

பரீட்சையில்
சிலவேளைகளில்
நான்கு தெரிவுகளுக்கும் வட்டமிடலாம்
யதார்த்ததில் எப்போதும்
தெரிவு ஒன்றுதான்

புதிதாய் ஒருவர்
வாழ்க்கையைப் பகிரவரும்போது
வேகத்தை நிதானமாக்கி
யோசிக்கவேண்டியிருக்கிறது சுற்றியிருப்பது குறித்தும்

எல்லாவற்றையும்
நிறுத்தலாமென்று தீர்மானிக்கையில்
ஒநாய்கள் தம்பிடியை தளர்த்தியிருந்தன
சிலுவைகள் நொறுங்கியிருந்தன
கடந்தகாலத்துயரநதி பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியிருந்தது.

Oct 20/05

9 comments:

SnackDragon said...

கனவுகள் (வருவதும் ) யதார்த்தம்தான். யதார்த்தம் கூட கடந்த காலமாக மாறி கனவுகளாகிவிடுவதுண்டு. கனவுகளின் வடு நிஜமானதுதான், கனவே மிஞாது என்றாலும்.
சிறந்த சுய விமர்சனம் கொண்டது இந்தக் கவிதை. பிரச்சினை, வைரங்களின் மதிப்பு மாறிக்கொண்டே இருப்பதுதான். விலையில் அல்ல மனதில். அவரவர் செயல்களுக்கு அவரவரே பொறுப்பு எனும்போது எங்கு வந்தது பங்கிடுதல்? சுற்றியிருப்பதில் இன்னொன்று சேரப்போகிற அது, இதுவரை தெரியாதிருந்தது, புதிய அன்பவங்களில் தனது அளவுகோல்களை நீட்டவில்லையெனில் இன்மைத் தவிர வேறெதுவும் இருக்காது!! :-)

10/20/2005 01:42:00 PM
Anonymous said...

padaippukku brovin n-anRi
arumai
[both comments are copyrighted to -/peyarili.]

-/peyarili.

10/20/2005 01:54:00 PM
Anonymous said...

Thanks DJ. Nice.

10/20/2005 03:43:00 PM
Anonymous said...

பதிந்தது:இளைஞன்

//புதிதாய் ஒருவர்
வாழ்க்கையைப் பகிரவரும்போது
வேகத்தை நிதானமாக்கி
யோசிக்கவேண்டியிருக்கிறது சுற்றியிருப்பது குறித்தும்//

உண்மைதான் டிசே.
கருப்பொருள் நன்று & கவிதை நன்று.

20.10.2005

10/20/2005 04:23:00 PM
Anonymous said...

சொற்களின் தேர்ந்த கோர்வை; நல்ல கவிதை டிஜே.

10/20/2005 05:56:00 PM
Anonymous said...

DJ,
Yethaiyum niruththa mudiyaathu.
Yen niruththa vendum.
niruththa padavaendiyathai Nadaththi vittaalum,
Siluvaigal norungum,
Oonaaigal than pidiyai vidum,
thuyara nathiy urainthu irukkum: katantha kaala ninaivugalil.

kavithai nandru, karup porul pachchaathabaththai kondirunthaalum. :)

10/20/2005 06:52:00 PM
பத்மா அர்விந்த் said...

டீசே
கவிதை அருமை. ஆனால் யதார்த்ததின் தெரிவு ஒன்றாய்த்தான் இருக்க முடியும் என்பதில் தவறிருக்கிறதோ என்று தோன்றுகிறது.(இல்லை எனக்கு புரியவில்லையா? இப்போது வரும் பல பதிவுகள் எனக்கு புரிவதே இல்லை என்பது வேறு விஷயம்.

10/20/2005 08:10:00 PM
இளங்கோ-டிசே said...

கார்த்திக்,பெயரிலி(யா?), தஙகமணி, இளைஞன், சன்னாசி, பாலாஜி-பாரி மற்றும் பத்மா பின்னூட்டங்களுக்கு நன்றி.
....
இப்போது காலையில் எழுதியதை இரண்டு மூன்று முறை வாசித்துப்பார்க்கவும் பின்னூட்டங்களைப் படித்துப் பார்க்கவும், வேறு விதமாய் சற்று எழுதியிருக்கலாம் போலத் தோன்றுகிறது (காலம் பிந்திய ஞானோதயம்). நான் எழுதியதை விட பின்னூட்டங்கள் விரிவான வாசிப்பை எனக்குத் தருகின்றன.
....
கார்த்திக், கிட்டத்தட்ட சுயவிமர்சனம் என்றாலும், அநேகரால் என் 'கவிதைகளுக்கு' வைக்கப்பட்ட விமர்சனம் 'பெண் பாதிப்பு/ஆக்கிரமிப்பு'. ஆனால் பாருங்கள் சுயவிமர்சனத்தில் கூட அதைத் தவிர்க்கமுடியாதிருக்கின்றது என்பது எவ்வளவு முரண் :-(.
....
இளைஞன், உங்கள் கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது என்று அறிந்தேன். வாழ்த்து. தொடர்ந்து உற்சாக்மாய் எழுதுங்கள்.
.....
//karup porul pachchaathabaththai kondirunthaalum.//
பாலாஜி-பாரி, இப்படியாவது முன்னேறுவம் என்றால் விடமாட்டீர்கள் போலக்கிடக்கிறது :-).
.....
பத்மா தெரிவுகளைப் போல வாசிப்பும் பலவகைகளில் சாத்தியம் என்றளவில் எதுவுமே தவறாக் இருக்கப்போவதில்லை :-). சில சந்தர்ப்பங்களில் ச்மரசம் செய்யாமல், ஒரேயொரு துருப்புச் சீட்டைத்தான் தூக்கலாம் என்று சந்தர்ப்பங்கள் வாழ்வில் வந்துவிடுவதில்லையா? அதைத்தான் குறிப்பிடவிளைந்தேன். மற்றப்படி நீங்கள் குறிப்பிட்டமாதிரி, நமது நாளாந்த வாழ்வே பல்வேறு தெரிவுகளால் பின்னிப்பிணைக்கப்பட்டதுதானே :-).

10/20/2005 10:58:00 PM
Chandravathanaa said...

arumai

10/29/2005 11:05:00 AM