கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எனது பெயரும் அகதி.

Saturday, January 13, 2007

காலதேவன் தன் சோழிகளை உருட்டுகின்றான். எவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துவிடமுடியாதபடி சோழிகள் ஒரு தீவு தேசத்தின் இருமொழிகளின் நடுவில் சிக்கிப்புதைகின்றன. போரின் அரசன் சரிகின்ற மனிதவுடல்களைப் புசித்து நூற்றாண்டுகால தன் தீராப் பசியைத் தீர்த்துக்கொள்கின்றான். குருதியும், வன்மமுமே தமக்கான வாழ்வின் அடிநாதமென சபிக்கப்பட்ட புதிய தலைமுறைகள் இயற்கை கொஞ்சும் அழகான தேசத்திலிருந்து தோன்றத் தொடங்குகின்றன. காற்சட்டை ஒழுங்காய் இடுப்பில் அணியத்தெரியாது...

உடல்மொழிக் கவிதைகள்

Saturday, January 13, 2007

-பெண்களின் படைப்புகள்- காமம் உயரும் மலையடிவார கும்பிகளுக்குள் திணறி அடக்கமுறும் மனித மூச்சுகளும் பள்ளங்களின் ஆழப் புதைவில் அலறி ஓயும் குரல்களின் இறுதி விக்கல்களும் உண்டு இங்கு சுவருக்கு செவிகள் உண்டு இருளுக்கு கூர் விழிகளும் உண்டு பீறிக் கசியும் ரத்தமாய் மேலும் உண்டு இன்னொன்று - அவளுக்கு (ஆழியாள் - 'துவிதம்') .................... விஸ்வரூபம் எதோ ஒரு பருவ மாற்றத்தில் எனது அங்கங்கள் ஒவ்வொன்றும் மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு...

Little Children - திரைப்படம்

Friday, January 12, 2007

உறவுகள்; முகிழும்போது அழகாகவும், நாட்கள் செல்லச் செல்ல அது சுவராசியமற்றுப் போவதன் அவஸ்தையையும் Little Children படத்தில் இயல்பான நிகழ்வுகளின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார்கள். படத்தைப் பார்த்துக்கொண்டு போகும் எவருக்கும் மனித விழுமியங்களின் பெறுமதி எத்தகையென்ற கேள்விகள் எழும்பத்தான் செய்யும். Children என்ற ஏற்கனவே வெளிவந்த நாவலைத் தழுவி, Little Children ஐ படமாக்கியுள்ளார்கள்....

நாய்

Friday, January 12, 2007

நாய் பலவீனங்களிலிருந்து தனக்கான அபிப்பிராயங்களை உருவாக்குகின்றது இன்னொரு வீழ்ச்சிபற்றி குரைக்கும்போது தனக்கான வீழ்ச்சியின் கற்களையும் முதுகில் தாங்கியபடியே ஆட்டுகின்றது வாலை தனக்கான கடவுளும் தான் பேசும் அரசியலும் நரிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றதென நாயும் நரிகளின் குரல்களில் ஊளையிட்டால் பிரதிஸ்டை செய்து பீடத்தில் ஏற்றப்பட்டு குழாத்து சொறிதல்களும் சொகுசாய்க் கிடைக்கலாமெனினும்..... பரிகள் நரிகளாயினும் நாய்கள் நரிகளாவதில்லை நாயை நோக்கி ஊளையிடும்...

வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்

Friday, January 12, 2007

-மீள்பதிவு-உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க...

சேரன்

Thursday, January 11, 2007

-'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து- சேரனின் ஏழாவது கவிதைத் தொகுதி, 'மீண்டும் கடலுக்கு' சென்ற வருடம் வெளியாகியிருக்கின்றது. அநேக கவிதைகளில் காமமும் குளிரும் தொடர்ந்தபடி கூடவே வருகின்றன. கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் வின்ரர் பருவத்து கொடுங்குளிரைத் தாங்குவதற்கு நனவிடை தோய்தல்களும், காமம் சார்ந்த தகிப்புக்களும் பலருக்கு ஆறுதலாகின்றன. இத்தொகுப்பிலுள்ள சேரனின் கவிதைகளும் அதற்கு விதிவிலக்கில்லாது புலம்பெயர்ந்த தனி மனிதன் ஒருவனின் வாழ்வைப்...

வைரமுத்து

Wednesday, January 10, 2007

வைரமுத்து -நான் அறிந்தவைகளினூடாக- வைரமுத்து, எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு மறுதலிக்கின்றேனோ அதற்கு மாறாய் வைரமுத்துவை ஒரு சிறந்த பாடலாசிரியராய் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. இன்றையபொழுதில் தாமரை, நா.முத்துக்குமாரின் பாடல்களில் பிடிப்பு வந்து வைரமுத்துவை கடந்துவந்துவிட்டாலும் வைரமுத்துவின் பாடல்வரிகளை எப்போது கேட்டாலும் மனதை நிறைக்கத்தான் செய்கின்றது. கவிதைகள்...

இன்மையின் இருப்பை இசைத்தல்

Tuesday, January 09, 2007

புத்தக அலுமாரியில் பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றன புததகமொன்றைத் தொலைப்பதென்பது காலம் வரைந்த வரைபடத்தின் கோடொன்றை பறிகொடுப்பதாகும் அன்றொரு பூச்சியை நசுக்கிக்கொல்கையில் இரத்தம் வராதது ஆச்சரியமாயிருந்தது பின்னாளில் என் வரைபடத்திலிருந்து இந்நாட்டுப்பூர்வீகக்குடியொருவன் காணாமற்போயிருந்தான். --------------------------- மாவிளக்குப்போட்டு சுவைக்க திருவிழாக்கள் வரும் எதிர்பார்க்காத் தருணத்தில் விரலநீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய் என் நாசியைப்...

மல்கம் எக்ஸ்

Monday, January 08, 2007

-ரவிக்குமாரின் 'மால்கம் எக்ஸ்' நூலை முன்வைத்து- 'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation' -Malcolm X- அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில்...

அகதி

Monday, January 08, 2007

பல்வேறு கனவுகள் உலாவித்திரிந்த வெளியில்நானுமொரு மழலைக்கனவாயிருந்தேன்கனவுகளுக்கு மொழியோ நிலமோ அடையாளங்களாவதில்லைஆதாமும் ஏவாளும் பிணைகையில்கண்ட முதற்சாட்சியென கோபங்கொண்டான் சாத்தான்தங்களுக்கான சுருக்குக்கயிறுகள்மழலைகள் சொந்தம் கொண்டாடவிரும்பாத மொழியிலும் நிலத்திலும்இரவுபகலின்றி தயாரிக்கப்படுவதாய்வன்மத்துடன் துப்பாக்கிகளில் புகுந்து துரத்தத்தொடஙகினான் சாத்தான்இவ்வாறாகத்தான்என்னைப்போன்ற அகதிகளின் கதைஒரு தீவு தேசத்திலிருந்து ஆரம்பித்தது.....................நண்பர்களுக்கு,திங்கள்...