கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாடற்றவனின் குறிப்புகள்

Thursday, June 07, 2007

-கவிதைத் தொகுப்பு: இணையத்தில் வெளியீடு செய்தல்-

elanko1

கவிதைகளைத் தொகுப்பாக்க வேண்டுமென்று வலைபதிவு நண்பர்களிலிருந்து -வலைப்பதிவுக்கு அப்பாலிருந்து- உற்சாகப்படுத்திய நண்பர்கள்வரை அனைவரையும் இத்தருணத்தில் அன்புடன் நினைவுகூர்கின்றேன். தொகுப்பு வேலைக்கு உதவி என்று நான் தேடிப்போன அனைவரும் தங்களால இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் மனமுவந்து தந்திருந்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தொகுப்பு வேலையின்போது அருமையான சிலர் புதிதாக நணபர்களாகியும் இருக்கிறார்கள்.

எனது சோம்பலாலும் -இவையெல்லாம் கவிதைகள்தானா- என்று வந்த சோர்வாலும், தொகுப்பு வேலையிலிருந்து தப்பியோட முனைந்தபோதெல்லாம், மீண்டும் தொகுப்பு வேலைக்கு இழுத்து வந்து அமர்த்திய பிரியமானவர்களின் கரங்களை நெகிழ்வுடன் பற்றிக்கொள்கின்றேன். பத்து வருடங்களுக்கு மேலாய் எழுதிக்கொண்டிருக்கின்றேனென காலம் கணக்குச் சொன்னாலும், அவற்றிலிருந்து ஒரு ஐம்பது ந்ல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது என்பதே எவ்வளவு கடினமாய் இருந்தது என்பதை நினைக்கும்போது கடக்கவேண்டிய தூரம் மிகத் தொலைவில் இருப்பது புரிகிறது.

ஒரு வருடத்திற்கும் மேலாய் நீண்ட இத்தொகுப்பு வேலைக்கு உதவிபுரிந்த அனைவரையும் பட்டியலிட்டு பிரதியில் நன்றி கூருதல் சாத்தியமில்லை. பட்டியலிட்டவர்களை விட பட்டியலிட்டப்படாத நண்பர்களின் எண்ணிக்கை நீண்டதானது. அனைவரின் நினைவுகளையும் நேசத்துடன் பத்திரப்படுத்தியபடி வழிப்பயணம் தொடரும் நன்றி.


Nadattavain Kuripukal (Poetry Collection in Tamil)
Elanko, First Edition: 2007
Published by Ampana


பிரதிகளுக்கான தொடர்புகளுக்கு:
டிசே (இளங்கோ)
E-mail: elanko@rogers.com / dj_tamilan25@yahoo.ca

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்:
'அடையாளம்'
1205/1 Karupur Salai,
Puthanatham 621310, TamilNadu

41 comments:

Boston Bala said...

வாழ்த்துகள் :)

அடுத்து கட்டுரைத் தொகுப்பும் கூடிய சீக்கிரமே வெளியிட வேண்டுகிறேன்.

6/07/2007 11:57:00 AM
Anonymous said...

வாழ்த்துக்கள் :) புத்தகம் போட எவ்வளவு செலவாச்சு? கூடியவிரைவில் கட்டுரைத்தொகுப்பும் வெளிவர வாழ்த்துக்கள்

6/07/2007 12:16:00 PM
பூனைக்குட்டி said...

Congrats Buddy.

6/07/2007 12:24:00 PM
Venkat said...

டி.சே, ஒஹ்ஹோஓஒஹ்! (உற்சாக விசில்).

மிக நல்ல விஷயம். மனம் கனிந்த வாழ்த்துக்கள். இந்தத் துவக்கம் நீண்ட பதிப்புப் பயணத்திற்கு இட்டுச் செல்ல வாழ்த்துக்கள்.

(இன்னொரு ஆளும் இருக்கிறார். அவரது தொகுப்பு எப்போ வருமோன்னு தெரியல்லை.)

6/07/2007 01:13:00 PM
கறுப்பி said...

நான் நினைச்சன் டீசே. நீங்களே விமர்சனம் எழுதிப்போட்டிருக்கிறீங்கள் எண்டு. சிலாக்கள் வேறு வேற பெயரில தங்கட படைப்புக்களை புகழ்ந்து விமர்சிக்கிறதும் நடக்குதாம் எண்டு கேள்விப்பட்டன். அதுதான் உடன பயந்திட்டன்.

உங்கள் கவிதைகள் ஆழமானவை தரமானவை எப்போது வெளியிட உள்ளீர்கள்?

Why "Naadattavan"??

வாழ்த்துக்கள்

6/07/2007 01:17:00 PM
சினேகிதி said...

வாழ்த்துக்கள் டிசே! அன்றைக்கு நேரில் சொன்னபோது ஓசில ஒரு புத்தகத்தை அடிக்கலாம் என்று பார்த்தேன் :-) நிமிர்வுக்கு வரும்போது சில பிரதிகளைக் கொண்டுவரவும்.

எப்போ எங்க வெளியீட்டு விழா?

6/07/2007 01:30:00 PM
மலைநாடான் said...

டி.ஜே!

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

6/07/2007 01:58:00 PM
இளங்கோ-டிசே said...

அநாமதேய நண்பர், இந்தப்பதிவிலுமா நீங்கள் விளையாடவேண்டும் :-( சொந்தவிபரம் வேண்டுமா? சொந்தப்பெயரோடு வந்து கேளுங்கள். தனிப்பட்ட மெயிலில் அனுப்பிவிடுகின்றேன். இங்கே வேண்டாமே!

6/07/2007 03:44:00 PM
நளாயினி said...

oo. vaalthukal.enaku oru book.

T.nalayiny
rue de bresse 3
1963 vetroz
swiss.

6/07/2007 05:21:00 PM
Mookku Sundar said...

வாழ்த்துக்கள் இளங்கோ..

நிறைய கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் என்று சொல்ல மாட்டேன்..

கவிதைகள் குறைவாகவும் செறிவாகவும் இருப்பதுதான் அழகு. நித்தமும் கவிதை எழுதியும் அது உத்தமமாக இருக்க, பித்தம் பிடித்திருக்க வேண்டும். அது உமக்கு வேண்டாம்
:-)

6/07/2007 06:20:00 PM
இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி நண்பர்களே.

6/07/2007 09:52:00 PM
வி. ஜெ. சந்திரன் said...

வாழ்த்துக்கள் டிசே

6/07/2007 10:03:00 PM
Chandravathanaa said...

வாழ்த்துக்கள் டிசே

6/07/2007 11:48:00 PM
Anonymous said...

வாழ்த்துக்கள் டிசே!

6/07/2007 11:54:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
.....
கறுப்பி: 'நாடற்றவனின் குறிப்பு' என்றொரு கவிதையில் வரிகள் வருகின்றன. அதையே தொகுப்பின் தலைப்பாக்கியிருந்தேன்.
.....
அநாமதேய நண்பர்: பிரதிகளின் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை, அச்சிட்டப்படும் தாளின் தரம் போன்ற்வற்றிற்கேற்ப செலவு வேறுபடும். மேலதிக தகவல்கள் தேவையெனில் எனது மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். எனக்குத் தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

6/08/2007 08:20:00 AM
Ayyanar Viswanath said...

டிசே

முதல் கவிதை தொகுப்பு.. பரவசம் வெட்கம் பெருமிதமென எல்லாம் கலந்த அற்புதமான உணர்வாய் இருந்திருக்க கூடும்..வாழ்த்துக்களும் அன்பும்

தலைப்பு நல்லாருக்கு டிசே இந்தப் பாலைல கிடைக்காது இந்தியா விலிருந்து வரும் நண்பணொருவனிடம் சொல்லியிருக்கேன் படித்ததும் தொடர்பு கொள்கிறேன்

6/09/2007 05:35:00 AM
-/சுடலை மாடன்/- said...

வாழ்த்துக்கள் டிசே. மேலும் பதிப்பித்தல் தொடர வேண்டும். உங்களுடைய உரைநடை எழுத்துக்களும் பதிப்பிக்கப் பட வேண்டும் (அவைகள் மீது நடந்த உரையாடல்களையும் உள்ளிட்டு).

நன்றி - சொ. சங்கரபாண்டி

6/10/2007 08:20:00 PM
சுந்தரவடிவேல் said...

வாழ்த்துக்கள் டிசே! மகிழ்வாயிருக்கிறது. அடுத்த நல்ல சேதிய் எப்ப சொல்லப்போறீங்க?:))

6/10/2007 09:09:00 PM
மயிலாடுதுறை சிவா said...

வாழ்த்துகள் டிஜே

மயிலாடுதுறை சிவா

6/11/2007 09:39:00 AM
Anonymous said...

வாழ்த்துக்கள் டிஜே

சாரா

6/11/2007 11:28:00 AM
இளங்கோ-டிசே said...

பிரியங்களுக்கு நன்றி நண்பர்களே.

6/11/2007 02:41:00 PM
அற்புதன் said...

வாழ்த்துக்கள் டிசே,
பயணம் தொடர.:-)

6/11/2007 03:22:00 PM
தங்கமணி said...

இன்னும் பல புத்தகங்கள் வெளியீடுகள் காண என் அன்பான வாழ்த்துக்கள்!

6/11/2007 09:38:00 PM
Anonymous said...

Congrats on your achievement..
God bless you and be with you on your way long…

Enrum Anbudan
S & G

6/12/2007 01:07:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி அற்புதன் & தஙகமணி.
....
S & G : பத்து வருடங்களுக்கு முன் எழுதிய என் ஆரம்பக்கவிதைகளை வாசித்த... உற்சாகப்படுத்திய... உங்களை மீண்டும் கண்டெடுத்தது....இப்படிப் பின்னூட்டத்தில் காண்பது எல்லாம் வாழ்வின் அரிய் தருணங்கள்தான்.

6/13/2007 09:15:00 AM
Anonymous said...

வாழ்த்துக்கள் டிசே
ingku ippoothaikkuk kidaikkaathu.
i'll try to get a copy from colombo & will write 2 u laterrrr

6/17/2007 11:58:00 PM
Anonymous said...

வாழ்த்துக்கள் டிசே
ingku ippoothaikkuk kidaikkaathu.
i'll try to get a copy from colombo & will write 2 u laterrrr

6/17/2007 11:58:00 PM
இளங்கோ-டிசே said...

Hari நன்றி. ஊரில் வேறு சிலருக்கும் பிரதிகள் அனுப்பவேண்டும். உங்களோடு பிறகு தொடர்புகொள்ளுகின்றேன்.

6/19/2007 10:48:00 AM
Anonymous said...

டிசே, மறக்காமல் பதிப்பகத்திலிருந்து மின்பிரதியொன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே தளக்கோலத்துடனான pdf ஆகப் பெறமுடியும்தானே. சிலகாலத்தின் பின்னர் மின்னூலாக வெளியிடலாமல்லவா :-) வாழ்த்துக்கள்.
-கோபி

6/19/2007 02:20:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி கோபி. பிரதியை pdfல் எடுத்துவைக்கின்றேன்.

6/25/2007 02:26:00 PM
மு. மயூரன் said...

pdf ஐ மட்டுமல்ல.
அதனோடு சேர்த்து அச்சகத்திலிருந்து தட்டெழுதப்பட்ட மென்படியையும். :-)

6/26/2007 04:30:00 AM
நளாயினி said...

உங்கள் கவிதைத்தொகுதி கிடைக்கப்பெற்றது. உங்களிற்கு மெயில் செய்திருந்தேன். பதிலைக்காணம். உங்கள் புத்தகம் கிடைத்து 2 கிழமைகளாகிறது. நன்றி.

9/19/2007 04:19:00 AM
பாம்பாட்டிச் சித்தன் said...

வணக்கம், உங்களின் தொகுப்புக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

9/26/2007 04:03:00 PM
தமிழ்பித்தன் said...

இன்றுதான் இந்த பதிவையே பார்த்தேன் வலைப்பதிவர் ஒருவரின் கரத்திலிருந்து ஒர் புத்தகம் என்ற போது நானும் ஒர் வலைப்பதிவன் என்ற வகையில் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்

9/29/2007 12:24:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.

10/03/2007 02:57:00 PM
Anonymous said...

Hello there,

Congratulations!

I have only read a few poems here and there. I was shocked to see that a line in a poem was exactly like Cheran´s line ´´kattida idippadukalul sikkiya koonthal kattrai naaan¨ yours goes like ´´kadikara mutkalul sikkiya palli naan´´ or a little differently if not in the very words above. There´s also line like that in one of Sukumaran´s poem. You have commented/criticized that Cheran´s poems in ´´Meendum Kaddalukku´´ collection are not that great, but is copying/replicating is alright? I tink it is normal to have influence of other poets but why people do not accept the fact?

This was in my mind since I read the poem.

Good luck.
Vinothini

3/29/2008 11:42:00 AM
Anonymous said...

Quick reply, wow.

Well, I have no anger or bad feelings about your comments on Cheran´s book. Each and every one of us (or individuals) has/have our own opinions and feelings. And naan kovinda podum kumbalul oru aal illai. I too, have different views on Cheran´s poetry and other work can be criticized or accepted as they are. Yet we cannot deny the fact that he´s a poet and that his language is with its own style and beauty.

Regards,Vinothini

3/29/2008 12:40:00 PM
இளங்கோ-டிசே said...

Hi Vinothini,
Its my mistake, the comment i posted at the first was deleted by me for more corrections. When i was correcting and add more lines, i had to go outside and when i came home, one of my family members had shut down my computer. Because of that i had lost the comment. If you have my follow-up comment, Could you please forward it to my mail address (dj_tamilan25@yahoo.ca), so that i can post the comment (or i will try to write it again in coming days).
.......
/Yet we cannot deny the fact that he´s a poet and that his language is with its own style and beauty./
It is true. I never deny Cheran's talent on poems. The problem is, he is afraid to go beyond his starting poems (there only he created his own style and it was unique. I never question about it). I still beleive a good writer should do more experiments with his/her language and style with times. Thank you.
.....
Seems like you are in vacaton. I don't want to ruin your mood more :-).

3/30/2008 01:14:00 PM
இளங்கோ-டிசே said...

(அழிந்துபோன பின்னூட்டம், ஞாபக அடுக்கிலிருந்து...)

வினோதினி, நன்றி.
....
நீங்கள் எனது கவிதைத் தொகுப்பை வாசித்து ஒரு விமர்சனத்தை வைக்கவேண்டும் என விரும்புகின்றேன். அது எனது கடந்தகாலத் தவறுகளை/பாதிப்புக்களைத் திருத்திக்கொண்டு முன்னே நகரக்கூடிய வெளியைத் தரக்கூடுமென்று நம்புகின்றேன்.
....
நீங்கள் -மேலே -குறிப்பிட்ட வரிகள் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதில் அது எனது சரிவுகளில் ஒன்றெனத்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. ஆனால் சேரனதோ அல்லது எனதோ முழுக்கவிதையை வாசிக்காமல், சில வரிகளை மட்டும் உருவியெடுத்துக்கொண்டு அதன் பாதிப்பு இதில் இருக்கின்றது என அவ்வளவு எளிதாககூறமுடியுமா எனவும் யோசிக்கிறேன். ஏற்கனவே சொல்லப்பட்ட வார்த்தைகளைத்தான் மீண்டும் மீண்டும் கலைத்துப்போட்டு கவிதைகளாக்கிக்கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் அறியாததுமல்ல.(மற்றது அந்தக்கவிதை எனது தொகுப்பில் சேர்க்கப்படவில்லை).
....
சேரனது, 'மீண்டும் கடலுக்கான' எனது பார்வை சேரன் கடந்தகாலத்தில் தேங்கிப்போனதைப் பற்றித்தான் அதிகம் பேசிகிறது என நினைக்கின்றேன். எனது அந்தப்பார்வை பலருக்கு உடன்பாடில்லை என்பதுவும் எனக்குத் தெரியும். அதற்காய் கும்பலில் கோவிந்தா போட்டுக்கொண்டிருக்கவும் முடியாது. நீங்களும் சேரனின் 'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை வாசித்திருப்பீர்களென நினைக்கின்றேன். எனது பார்வைகளை எப்படி நிராகரிக்கின்றீர்கள் என உங்கள் பார்வையை வைத்தால் விரிவாக உங்களுடன் உரையாட ஆவலாகவேயுள்ளேன்.
நன்றி.

3/31/2008 09:46:00 PM
Anonymous said...

Hi,

சேரனதோ அல்லது எனதோ முழுக்கவிதையை வாசிக்காமல், சில வரிகளை மட்டும் உருவியெடுத்துக்கொண்டு அதன் பாதிப்பு இதில் இருக்கின்றது I would like to tell you that I have read Meendum Kadalukku.

But I have yet to read your collection.

சேரனது, 'மீண்டும் கடலுக்கான' எனது பார்வை சேரன் கடந்தகாலத்தில் தேங்கிப்போனதைப் பற்றித்தான் அதிகம் பேசிகிறது என நினைக்கின்றேன். This is your opinion; and people are different, so each individual has his or her own view. I am not telling any one to change them.

எனது அந்தப்பார்வை பலருக்கு உடன்பாடில்லை என்பதுவும் எனக்குத் தெரியும். அதற்காய் கும்பலில் கோவிந்தா போட்டுக்கொண்டிருக்கவும் முடியாது. I am not in any 'kumbal'.

நீங்கள் எனது கவிதைத் தொகுப்பை வாசித்து ஒரு விமர்சனத்தை வைக்கவேண்டும் என விரும்புகின்றேன். I do not think that I am a suitable person to write a review.

Regards,
Vinothini

4/01/2008 08:35:00 PM
இளங்கோ-டிசே said...

Thanks for your comment. I might write something later.

4/02/2008 09:02:00 AM