
-எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலை முன்வைத்து-
அவிழ்க்க முடியாத புதிர்களும், சிக்கல்களும் நிறைந்த மர்மங்கள் பெருகும் வெளியாகத்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இருக்கின்றது. வாழ்தல்/வாழ்க்கையின் அர்த்தம் என்னவாக இருக்குமென சிந்திக்கத்தொடங்கி முகிழ்ந்த இருத்தலியமும், தனக்கான புதர் அடுக்குகளில் சிக்கிக்கொண்டு இன்னமும் கேள்வியை ஆழமாக்கியதே...