நன்றி: IRIN
தமிழாக்கம்: டிசே தமிழன்
கணேஸ்வரி சந்தானம் (31),சுதந்திர தமிழ் நாடு அமைப்பதற்காய் 25 வருடங்களுக்கு மேலாய் போராடி,அண்மையில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவர்.
-பல நாடுகளால் தீவிரவாத அமைப்பென அழைக்கப்பட்ட- இயக்கத்தில் இணைந்த இவர், சமாதான காலத்தில்...
"நான் உயிர்வாழ்வதற்காய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றேன்" - கணேஸ்வரி சந்தானம்
In தமிழாக்கம்Wednesday, May 26, 2010
மூன்று கவிதைகள்: சென்ற வருட நினைவுகளிற்கு...!
In கவிதைகள்Tuesday, May 18, 2010
கபாலங்களைக் காவிச்செல்லும் பறவைகள்
நள்ளிரவிலழும் குழந்தைகளை கதகதப்பாக்க
சிமினி விளக்குகளை காவியபடி
பறக்கும் சாம்பல் பறவைகள்
எனது குற்றங்களின் குறுகுறுப்பை
தாங்க முடியாத் துயரத்தில்
தவறவிடுகின்றன விளக்குகளை
சிதறிய எண்ணெய்த்துளிகளிலிருந்து
முத்துக்குமாரிலிருந்து முருகதாசன்வரை
எண்ணற்றோர் தீ மூட்டிக்கொள்ள
நூற்றாண்டுகளாய் நிலத்தினுள்
உறைந்துபோயிருந்த போர் அரக்கன்
விழிகள் விரித்து
இன்னமும் உடலங்கள்...
In
கவிதைகள்
Monday, May 10, 2010
செம்மஞ்சளாய்
இலைகள்
உதிர்ந்துகொண்டிருந்த பருவத்தில்
முன்பொருமுறையும் சென்றிராத
சிறுதீவுக்கு பயணித்திருந்தேன்
ஒரு மதுபானவிடுதியின்
இருட்டுமூலையில்,எனது
கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை
அந்நியமான சூழலில்
தோலின் நிறத்தை
நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது
இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்.
திடீரென
dance floorன் மையத்தில்
இழுத்துச்சென்று
ஆட்டத்தின்
எந்தவிதியும் அறியாவென்னை
soca...
நஞ்சு
In கவிதைகள்Saturday, May 08, 2010
குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
பனிக்குள் பத்திரப்படுத்திக் கையளிக்க
மாயன்காலத்தவர்கள் போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன
காளான்களாய்...
இரண்டு உலகங்களுக்கு இடையில்...
In திரைமொழிSaturday, May 08, 2010

-விமுக்தி ஜெயசுந்தராவின் Between Two Worldsஐ முன்வைத்து-
1.
திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்றொரு விம்பம் தமிழ்ச்சூழலில் பொதுப்புத்தியில் பதிந்திருக்கின்றது. அவ்வாறான சூழலிலிருந்து வரும் நெறியாளர்களும் பொதுப்புத்தியைத் தவிர்த்து புதிய களங்களில் தமிழ்த்திரைபடச்சூழலை நகர்த்துவதற்கு அக்கறை கொள்வதுமில்லை.. ஆகவேதான்,...
சமகால ஈழத்து இலக்கியம் - 03
In ஈழத்து இலக்கியம்Wednesday, May 05, 2010
இதைவிட ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேசமுடியாது. 'வரையாத தூரிகை, 'எனக்கு கவிதை முகம்', 'உடல் பச்சை வானம்' என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார். மேலும் தொகுப்பாய் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காதபோதும் சிறுகதைகளில் தனித்து மிளிரும் திசேராவும், கவிதைத்தளத்தில் பஹிமா ஜகானையும்...
சமகால ஈழத்து இலக்கியம் - 02
In ஈழத்து இலக்கியம்Sunday, May 02, 2010
(2000ம் ஆண்டுகளின் பின்பான பிரதிகளை முன்வைத்து)
இந்த இடத்தில் பெயர்களைப் பட்டியலிடுவதை சற்று நிறுத்தி, மீண்டும் தொடர்ச்சியாக எழுதுவது/ எழுதாமல் இருப்பதன் புள்ளி குறித்து சற்றுப் பார்ப்போம். பல்வேறு புறக்காரணங்கள் இருந்தாலும், ஈழத்திலக்கியத்தில் நல்ல சில படைப்புக்களை எழுதிய எத்தனையோ பேர்கொண்ட பட்டியல் நம்மிடம் நீண்டதாய் இருக்கிறது. ரஞ்சகுமார் ஓர் அருமையான தொகுப்பான 'மோகவாசலோடு' நிறுத்திவிடவில்லையா?...
சமகால ஈழத்து இலக்கியம்
In ஈழத்து இலக்கியம், In உரைSaturday, May 01, 2010
(2000ம் ஆண்டுகளின் பின்பான பிரதிகளை முன்வைத்து)
1.
சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுகவேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப்பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது.. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென...
Subscribe to:
Posts (Atom)