
3.
எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலுக்கு விமர்சனம் எழுதியபோது, 'யாமம்' காலனித்துவத்தை ஒரு எதிர்மறையாக மட்டும் பார்க்கின்றது என்ற குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' காலனித்துவத்தின் இருபக்கங்களும் மிக அவதானமாக முன் வைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். உதாரணத்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவரே...