
1.
யமுனா ராஜேந்திரனின் 'அரசியல் இஸ்லாம்' என்கின்ற கட்டுரைகளின் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாமோடு சம்பந்தப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் ஒரு தொகுப்பு எனலாம். பாலஸ்தீனப் பெருங்கவியான மஹ்முத் தர்வீஸிலிருந்து, ஈரானிய இயக்குநனரான அப்பாஸ் கியரோஸ்மியின் படங்களைப் பற்றி மட்டுமில்லாது, ஃபூக்கோ, ழான் போத்ரிலார் போன்றோர் முஸ்லிம் நாடுகளின் மீது...