கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காகிதப்பூ குறிப்புகள்

Tuesday, September 29, 2015

 தீபன் (Dheepan) தீபன் படம் பல சிக்கலான விடயங்களைப் பேச முயல்கின்றது. ஷோபா, காளீஸ்வரி மற்றும் சிறுமியாக நடித்தவரின் நேர்த்தியான நடிப்புடன், திரைப்படமாக்கமும் சிறப்பாகவே இருக்கின்றது. எனினும் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பேசுபொருளாகவும், கதாபாத்திரங்களாகவும் கொண்ட இப்படம் யாருடைய குரலாக ஒலிக்கின்றதென்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. எந்தப் படமாயினும்...

இமையத்தின் 'எங் கதெ'

Wednesday, September 23, 2015

நம் தமிழ்ச்சூழலில் நல்ல படைப்புக்கள் கவனிக்கப்படாது ஒதுக்கப்படுவதும், 'சுமாரான' எழுத்துக்கள் உயர்வுநவிற்சியாக்கம் செய்யப்படுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றவைதான். அந்தவகையில் இமையத்தின் 'எங் கதெ' யிற்கு வழங்கப்பட்ட/வழங்கப்படுகின்ற மதிப்பீடுகள் சற்று அதிகமோ எனத்தான் இக்(குறு)நாவலை வாசித்து முடித்தபோது தோன்றியது. 'எங் கதெ' அதற்குரிய பலவீனங்களுடன்...

புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்கள்

Monday, September 21, 2015

(ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  ஆகிய தொகுப்புக்களை முன்வைத்து...) இன்றைய காலத்தில் கவிதைகளின் வகிபாகம் என்னவாக இருக்கின்றது? கவிதைகளை யார் வாசிக்கின்றார்கள் அல்லது யாருக்காக எழுதப்படுகின்றன. கவிதைகள் என்றில்லாது ஏனைய எல்லாக் கலைப்படைப்புக்களுக்குமாய்...

ஒரு கவிதை: பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியாக்கம்

Monday, September 14, 2015

ஒரு குளிர்கால இரவில் காதல் கணகணப்படுப்பாய் நுழைகையில் தழுவிக்கொள்ளும் ஆன்மாவில் உதிர்கின்றன நினைவின் வர்ணங்கள்; கடந்தமுறை புதர்படர்ந்த ஒற்றையடிப் பாதையில் வந்துபோன நேசமும் சாம்பல்நிற முயலின் வடிவில் இருந்ததும் தற்செயலானதல்ல ஒவ்வொரு முறையும் அறைகளை இறுகப் பூட்டி சாவிகளை தோட்டதிற்குள் எறிந்தாலும் வருகின்றவர்களிடம் நுட்பமான சாவிகள் இருக்கின்றன மறுக்கவும் மறுகவும் செய்கின்ற கடுங்குரல் மீறி கதவுகளைத் திறந்து இசையை மீட்கையில் நேசத்தின் அலைவரிசையிற்குள்...

போராளியின் காதலி

Tuesday, September 01, 2015

எமது இறுக்கமான சமூகத்திற்குள்ளிலிருந்து, தன்னையும் ஒருவித குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி போராட்டத்தினூடு விரிகின்றது என்பதை இப்புனைவு பேச முனைக்கின்றது. பெற்றோர்/உறவுகளோடு அவ்வளவு ஒன்றமுடியாத, சாதியத்தை ஏதோ ஒருவகையில் எதிர்க்கின்ற இப்பெண், தன்னோடு வைத்தியசாலையில் இணைந்து பணியாற்றிய போராளிக் காதலனைத் தேடி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்...