
'நட்சத்திரம்' என்கின்ற இந்நாவல் ரஷ்ய (அன்றைய
சோவியத் யூனியன்) உளவுக்காரர்களைப் பற்றியது; 2ம் உலகமகாயுத்தத்தில் ஜேர்மனியரைத் துரத்தியடிக்கின்ற
காலத்தைய கதைக்களன். ஒரு யுத்தத்தில் ஜேர்மனியர்கள்
பின்வாங்கி, பெரும் தாக்குதலை ரஷ்யப்படைகள் மீது நடத்த காடுகளுக்குள் பதுங்குகின்றனர்.
ரஷ்ய உளவுப்படையோ ஜேர்மனியர்களின் தடங்களைத் தவறவிட்டுத்
தேடிக்கொண்டிருக்கின்றது....