
(தமிழில் அசதா)
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த மெக்ஸிக்கோப் புரட்சி, 30 வருடங்களாய் ஆட்சியில் இருந்த டயாஸ் மொறியை பிரான்ஸிற்குத் தப்பியோட வைத்தது. அதன் பிறகு புரட்சிப்படையினருக்குத் தலைமை வகித்த மடேரோ ஜனநாயக முறையில் நிகழ்ந்த தேர்தலில் வெற்றி பெறுகின்றார். எனினும் வலதுசாரிகளால் இவரொரு மிகுந்த தாராளவாதியெனவும், புரட்சியை நடத்திய படையினரால் இவரொரு அதிதீவிர...