
தேர்ந்தெடுத்த சொற்கள், அங்கதச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களன்கள் என விரிகின்ற அ.முத்துலிங்கத்தின் கதைகள் வாசிப்பதற்கு சுவாரசியமானவை. 'பிள்ளை கடத்தல்காரன்' என்கின்ற இத்தொகுப்பில் அ.மு, 2012ன் பின் எழுதப்பட்ட 20 கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சியரா லியோன், இலங்கை, பாகிஸ்தான், கனடா எனப் பற்பல இடங்களுக்குக் கதைகள் பாய்ந்தபடியே இருக்கின்றன. 'முதல் ஆச்சரியம்'...