
The Kindness Diaries
வசதியான வாழ்க்கை வாழும் ஒருவன், பணியின் அழுத்தம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றான். ஒருநாள் தனது பழைய (1978) மஞ்சள் மோட்டார் சைக்கிளுடன் எல்லாவற்றையும் துறந்து பயணிக்கத்தொடங்குகின்றான்.
அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா ஆசியா என நிலப்பரப்புகள் விரிந்தபடியே இருக்கின்றன. இதில் என்ன வியப்பியிருக்கின்றது, மனிதர்கள் இப்படிப் பயணித்தல் இயல்புதானே...