
கட்சிக்காரன்
இமையத்தின் அண்மைக்காலக் கதைகள் என்னை அவ்வளவாய்க் கவர்ந்ததில்லை. பலரால் விதந்தோந்தப்பட்ட இமையத்தின் நாவலான 'எங் கதெ' பற்றி வேறுவிதமான பார்வை இருக்கின்றதென்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேன். அதைவிட விகடனில் என்றாவது ஒருநாள் நல்லதொரு கதை வெளிவந்துவிடுமா என தொடர்ந்து பார்த்தபடியிருப்பேன். வெளியில் நன்றாக எழுதும் படைப்பாளிகள் கூட விகடனில் எழுதும்போது...