
வாழைஒரு திரைப்படம் அது முடிந்தபின்னும் உறைந்தநிலையில் சில நிமிடங்கள் எதுவும் செய்ய முடியாமல் உங்களை இருக்கையில் இருக்கச் செய்கின்றது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தின் கதையை ஏற்கனவே ஒரளவுக்கு அறிந்திருக்கின்றீர்கள். ஆனால் அதைத்தாண்டியும் ஒருவரின் autobiography நம் ஆழுள்ளம் வரை தீண்டுகின்றது. ஒரு சிறுவன் வளர்ந்து ஆடவனாகவோ அல்லது வயதுக்கு வரும் (coming...