
யுவான் ரூல்ஃபோவின் 'தங்கச் சேவல்' (The Golden
Cockerel)
*********************
1.
எனது சிறுவயதுகளில் எங்களின் மாமா ஆட்டுக் கிடாய்களை வளர்த்துக்
கொண்டிருந்தார். அவை என்னை விட உயரமாகவும், திடமாகவும்
மட்டுமின்றி, கிட்டே போனால் அதன் கொம்புகளால் என்னை முட்டி வீழ்த்திவிடும்
மூர்க்கத்தோடு இருக்கும். இந்தக் கிடாய்கள் கோயில் வேள்விகளுக்கு வெட்டுவதற்கென
வளர்க்கப்பட்டன...