கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புலம்பெயர் நாவல்கள்

Sunday, November 21, 2004

புலம்பெயர் நாவல்கள் பற்றிய சில குறிப்புக்கள் ப.சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி', தமிழில் முக்கியமான நாவலென பலர் எழுதியுள்ளனர். இதன்ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு விதச் சலிப்புத்தட்டினாலும் (செட்டியார் வட்டிக்கடைப் பகுதி), பின்னர் ஒரே நீட்சியாக நாவலில் அமிழ்ந்து போகமுடிந்தது. ஆனால் செட்டியார் வட்டிக்கடைப் பகுதிகள் கூட ஒரு அத்தியாவசிய நோக்கில்தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று நாவலை முழுதாய் வாசித்தபிறகு புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நாவல்,...

Eminem

Saturday, November 20, 2004

Eminem 'n' Encore Eminemத்தின் பாடல்களை சிலவருடங்களுக்கு முன் கேட்டபோது, அவர் ஒரு women-hater என்ற அறிந்தபிறகு அவரது பாடல்களுடன் ஒன்றிப்போக முடியாமல் போய்விட்டது. எனினும் அவ்வப்போது MTVயில் அவரது பாடல்களை காட்சிப்படலங்களாய் பார்க்கும்போது அவரது எள்ளலும் கிண்டலும் மற்ற artists (கலைஞர்கள்?) களில் இருந்து வித்தியாசப்படுத்திக்காட்டியது. சில மாதங்களுக்கு முன் தான் அவரையும் அவரது பாடல்களையும் ஆழமாய் அறியவேண்டும் என்று ஒரு விருப்பம் ஏற்பட்டது....

*Well i din kow old ppl can be like diz

Tuesday, November 16, 2004

இன்று காலமை எழும்பி வெளியே வெளிக்கிட்டபோது, மாலையில் சிலவிடயங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். பிறகு மதியப்பொழுதில் ஒரு தோழியுடன் இணையத்தில் ஒரு விடயம் பேசியபின் சோம்பலில்லாமல் இரவிற்குள் பதிப்பித்திடவேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்தபத்தியின் முடிவில் தோழி சொன்ன விசயத்தைச் சொல்கிறேன். நான் இப்போது எழுதப்போகிற விசயங்கள் சிலவருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. இருபத்துநான்கு மணித்தியாலமும் பேசக்கூடிய மூன்று நான்கு...

கஸ்தூரியின் ஆக்கங்கள்

Tuesday, November 16, 2004

ஓர் அறிமுகம் கஸ்தூரி அவரது கவிதைகளினால் பரவலாக அறியப்படுகின்றவராயினும், நல்ல பல சிறுகதைகளையும் தனக்குரித்தான உலகினுள் நின்று படைத்துள்ளார். சிவரமணி, செல்வி போன்றோர் தீவிரமாய் இயங்கியபொழுதிலே இவரது பல ஆக்கங்களும் எழுதப்பட்டதாய் தெரிகிறது. சிவரமணியைப்போலவே மிக இளம்வயதில் (22 வயதில்) இவரும் அகால மரணமடைந்தவர். 'கஸ்தூரியின் ஆக்கங்கள்' எனத் தொகுப்பட்ட இவரது தொகுப்பிலே, ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழப்போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப்...

பச்சை தேவதை

Sunday, November 14, 2004

சல்மாவின் 'பச்சை தேவதை'சில அவசரக்குறிப்புக்கள் சல்மாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாய் பச்சை தேவதை வந்திருக்கிறது. முதலாவது தொகுப்பு (ஒரு மாலையும் இன்னொரு மாலையும்) பெற்ற கவனத்தை இந்தத் தொகுப்பு பெறவில்லையெனினும் அண்மைக்காலத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்புகளில் அதிகம் ஏமாற்றம்தராத தொகுப்பு இதுவென துணிந்து சொல்லாம். சல்மாவின் உலகம் எப்போதும் மனித உறவுகளை அதிகம் கவனித்தபடியே இருக்கிறது. அது வீட்டில் இருந்தால் என்ன, வெளியில் திரிந்தால் என்ன உறவுகளே...

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

Saturday, November 13, 2004

சி.புஸ்பராஜாவின், 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' எனது குறிப்புக்களும், சில அவதானங்களும் இலைமறைகாயாக மறைக்கப்பட்ட வரலாற்றின் இருண்மையான பக்கங்களைப் பற்றிப்பேசும் எந்தப் புத்தகமும் எனக்கு சுவாரசியமூட்டக்கூடியன. அந்தவகையில், சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' முக்கியமான ஒன்று. வரலாற்றை அதனுடன் சம்பந்தப்படாத அடுத்த தலைமுறை வாசிக்கும்போது/அறியும்போது உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால், அதிலிருந்து முற்றாக விலகியிருந்து...