கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்-2

Tuesday, December 07, 2004

சில அவசரக்குறிப்புக்கள்

கடந்த பதிவிற்கான கருத்தாய், சுகுமாரன் எழுதிய தற்கொலை பற்றிய கட்டுரை வாசித்தீர்களா என்று ஒரு நண்பர் எழுதியிருக்க, அந்தக்கட்டுரையை வாசிக்கவேண்டும் என்று ஆவல் உண்டாயிற்று. இங்கே ஒரேயொரு கடையில்தான் காலச்சுவடு, உயிர்மை விற்பனையாகிறது. எனக்கு அந்தக் கடைக்காரருடன் அவ்வளவு ஒத்துவராதது என்பதால் அங்கே போவது மிகவும் குறைவு. ஞாயிற்றுக்கிழமை ஒரு விடயம் காரணமாக அந்த இடத்திற்கருகில் போகவேண்டியிருந்தததால், நவம்பர் உயிர்மையும், டிசம்பர் காலச்சுவடும் வாங்கக்கூடியதாயிருந்தது. சுகுமாரன், சாவதும் ஒரு கலை என்ற தலைப்பில் உயிர்மையில் அருமையான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்

'எல்லோரும் ஒருமுறையாவது தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் அல்லது தாமாக வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இறுதிக்காட்சி பற்றி கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். ஓரிருமுறை மனத்துக்குள் ஒத்திகை பார்த்து ஒருமுறை தற்கொலைக்குத் துணிந்தேன்.' என்று தனது தற்கொலை முயற்சியை தொடர்ந்து விபரிக்கிறார். எல்லாவற்றையும் போல சாவதும் ஒரு கலை என்று கூறிய ஸில்வியா பிளாத், பிறரைப்போலல்லாது விதிவிலக்காக அதை அவர் நேர்த்தியாக செய்தார் என்று சுகுமாரன் அந்தக்கட்டுரையில் எழுதுகிறார்.

ஸில்வியா பிளாத் போலத்தான் சிவரமணியும் சாவதை ஒரு கலையாக, நேர்த்தியாக தனது தற்கொலையைச் செய்தார் என்று நினைக்கிறேன். மிக ஆறுதலாக் திட்டமிட்டு மாய்த்துக்கொண்டவர் அவர். இறந்த அந்த நாளில் கூட தன்னிடம் படிக்கவருபவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து மிக நிதானமாய் இருந்தவர் சிவரமணி என்று எனது தமக்கையார் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

தற்செயலாக எஸ்.ராமகிருஷ்ணனின் உயிர்மை கட்டுரையை வாசித்தபோது அதுவும் ஜப்பானியர்களின் தற்கொலையைப் பேசுவதாய் இருக்கிறது. திரைப்பட இயக்குனர் அகிரா குரசோவா கூட மூன்றுமுறை தற்கொலையை மேற்கொண்டு காப்பாற்றப்பட்டவர் என்ற குறிப்பிடப்படுகிறது. சாவது ஒரு கலை என்று காம்யு சொல்லியிருக்கிறார் என்று எஸ்.ராமகிருஷணன் குறிப்பிடுகிறார். (ஸில்வியா பிளாத், காம்யு இருவரும் coincidence இப்படி சொல்லியிருக்கிறார்களா? OR சுகுமாரன் அல்லது எஸ்.ராமகிருஷ்ணன் தவறுதலாக்குறிப்பிட்டனரோ சரியாகத்தெரியவில்லை).

சுகுமாரன் தனது தற்கொலை முயற்சி பற்றிச்சொல்லும்போது, ஸில்வியா பிளாத் அதை நேத்தியாகச் செய்தார், ஆனால் தான் இருபத்து நான்காம் வயதில் அதை நேர்த்தியில்லாமல்தான் செய்திருக்கிறேன் என்பது மாதிரி நானும் நேர்த்தியில்லாமல்தான் ஒருமுறை செய்திருக்கிறேன் என்பது கடந்தகாலம் பதிவுசெய்த ஒரு விடயம்.

1 comments:

சன்னாசி said...

சில்வியா ப்ளாத், தன் தலையை oven க்குள் வைத்துத் தற்கொலை செய்துகொண்டாள். நம்மால் அதைப்பற்றி எழுதத்தான் முடியும். அந்தப் பெண் போன்ற மனத்திடம் இருக்க வாய்ப்பில்லை. அவனுக்குள் தலையை வைத்துத் தற்கொலை செய்துகொள்வது என்பது கணப்பொழுது முடிவில்லை, அதற்குத் தைரியம் தேவை. காம்யு ஒரு விபத்தில் இறந்தார். அவர் உறவுவைத்திருந்த பெண்களின் எண்ணிக்கையைச் சொல்லவேண்டுமானால் ஒரு தனி directoryயே போடவேண்டுமென்பார்கள். சார்த்தர்,Being and Nothingness, Nausea என்று எக்ஸிஸ்டென்ஷியலிஸப் படைப்புக்களைப் படைத்துக்கொண்டிருந்தாலும், The second sex போன்ற படைப்புக்களை எழுதிய சிமோன் த போவா போன்ற ஒரு பெண்ணுடன் வாழ்ந்தார். மிஷெல் ஃபூக்கோவுக்கு எய்ட்ஸ். ஜப்பானிய seppukku போலத் தமிழிலும் 'வடக்கிருத்தல்' உள்ளது. பிசிராந்தையார் கதை. இரண்டாம் உலகப் போரில் தோற்றதும் ஜப்பானிய ராணுவத் தளபதிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.

என்ன சொல்லவருகிறேனென்றால், தற்கொலைகளுக்கும் கலாச்சார வித்தியாசம் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டியது முக்கியம்.

12/08/2004 01:17:00 PM