கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Thursday, December 29, 2005

கடற்கரையில்கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனாய்பிரியமாய் சேகரிக்கின்றேன்உனக்கான வார்த்தைகளைவார்த்தைகள் அனைத்தும்வன்முறையேறிஇரத்தமாய் வழிகின்றனஅல்லதுபோதையேறிபோலியாய் பல்லிளிக்கின்றனவலிக்கவும் செய்யாமல்வருடச்செய்யும் மென்மையுமில்லாமல்உன் திமிர்வுக்கேற்ற சொற்கள்தேடிபாலைவனத்தில் நடக்கத்தொடங்குகையில்நீ மணலிலும்நான் பனியிலும்எழுதி அழித்த வாக்கியங்கள்நட்சத்திரங்களாகின்றனவருடங்கள் கடந்துவாவிகள் தாண்டிஇலைகள்மஞ்சளும் சிவப்புமாய்உதிர்ந்துகொண்டிருக்கும்...

உடைந்த உரையாடல்கள்

Thursday, December 22, 2005

'என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?' 'ச் சா சா...என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.' 'இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிக்கைக்கு அனுப்பிவிடும்.' 'கூகிளிலிருந்தா?...

Tuesday, December 20, 2005

எதை எழுதினாலும் போலியாக இருக்கிறது அல்லது போலிகளைப் பேசுவதே கலகமாகிறது 'இராணுவம் கற்பழிக்கத்தான் செய்யும்' அற்புத தரிசனங்கள் தருபவர்கள் வரலாற்றை எழுதவும், பெண்களை சிதைத்துச்செல்பவர்கள் திசைகள் எங்குமலைந்து அரசியல் பேசவும் செய்யும் விசர்ப்பொழுதில் எதைப் பேசினாலும் எடுபடாது தோள்கள் தினவெடுத்தால் கொன்று குவிக்கவும் குறிகள் விறைத்தால் புணர்ந்து களிக்கவும் தமிழரென நாமமது தரணியிலே கொண்டோம் உமக்காய். கொல்லுங்களடா கொல்லுங்களடா வன்புணர்ந்துவிட்டு கிணற்றிலும்...

வாசிப்பு

Monday, December 19, 2005

Baise-Moi (Rape Me) ஒரு நாவலும், பார்க்காத படமும், வசீகரிக்கும் படைப்பாளியும் 'Baise-Moi', Despentes என்ற பிரெஞ்சுப் பெண்ணால் எழுதப்பட்ட நாவல். மனு(Manu) நடீன் (Nadine) என்ற இருபெண்களைச் சுற்றிக் கதை படர்கிறது. மனு, மிகவும் கொடூரமான முறையில் வன்புணரப்பட்டு வாழ்வதில் இழப்பதற்கும் பெறுவதற்கும் எதுவுமில்லை என்ற மனோநிலையில் இருக்கின்ற சமயத்தில், விலைமாதரும், நிகிலிஸ்டுமானான...

Tuesday, December 13, 2005

எல்லா விம்பங்களும் உடைய இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் தொங்கும் உறைந்துபோன பனியாய் இறுகுகின்றது மனது ஒரு திசை முழுதும் கண்ணாடி நிரப்பிய அறையிலிருந்து கதகதப்பாய் கம்பளி போர்த்தி தெருவை இரசிக்கையில் குளிரிலும் ஒப்பனை கலைந்துவிடக்கூடாதென்ற அவதியில் 'வாடிக்கையாளர்' தேடும் பெண்களும் வீடற்ற மனிதர்களும் நீலநிறமாக்குகின்றனர் எனது பொழுதை எதிர்ப்புரத்து தேவாலயத்தின் உச்சியிலிருந்து பல்கணியில் கரையொதுங்கிய புறாவின் சிறகுகள் நினைவுபடுத்தும் குளிராய்...

குளிரோடு வந்த ஞானம்

Wednesday, December 07, 2005

நிர்வாண விடுதியில் சுழன்றாடிய பெண்ணின் அடக்கிவைத்த துயராய் பொழிகிறது பெரும்பனி விண்வெளிக்குச் செல்லும் பயணியாய் ஆடைகள் புனைந்து குளிரில் உறைந்துகொண்டிருப்பவன் முன் கண்ணாடிச்சில்லுகளாய் தெறிக்கும் வாழ்வின் குரூர கணங்கள் பப்பாசிப்பழத்தை சீவும் இலகுவாய் கொலை கொலையாய் விழுகிறதாம் வல்லூறுகளும் இரைகவ்வ விரும்பும் ஊரில் மதியம் சோறும் கத்தரிக்காய்க்குழம்பும் உண்டால்தான் இரவுத்தூக்கம் வருமென்பதை மறைத்து பெருமிதப்படலாம் ஒரு கனடீயத்தேசியனென்று உடல்கள்...

லீனா மணிமேகலையின் 'பலிபீடம்'

Thursday, December 01, 2005

பலிபீடமும், லீனா மணிமேகலை பற்றிய சில குறிப்புக்களும் சில திரைப்படங்களைப் பார்க்கும்போது அதனோடு ஒன்றிப்போனாலும் படம் முடிந்தவுடன் இயல்புநிலைக்கு வந்துவிடமுடியும். சில படங்கள் குளத்தில் எறிந்த கல்லைப்போல படம் முடிந்தபின்னும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். ஒரு பொழுது இயலாமையும் அடுத்தகணம் கோபமுமாய் உணர்வுநிலைகள் மாற மாற, பார்த்து முடித்த ஆவணப்படம் 'பலிபீடம்'....

Get Rich or Die Tryin' (திரைப்படம்)

Friday, November 18, 2005

50 CENT எனப்படும் ஜாக்சனின் வாழ்வை, நிஜமும் புனைவும் கலந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள் (75% உண்மையான சம்பவங்கள் என்று 50 CENT அண்மையில் வெளிவந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்). திரைப்படம், போதை மருந்து விற்று வரும் பணத்தைச் சேமிக்கும் ஒரு இடத்தை ஜக்சனும் அவரது நண்பர்களும் கொள்ளையபடிப்பதுடனும், கொள்ளை முடிந்து வீடு திரும்புகின்றபோது ஜாக்சன் முகம் மறைக்கப்பட்ட...

ஒரு நாவல்: Memories of My Melancholy Whores

Tuesday, November 15, 2005

Memories of My Melancholy Whores by Gabriel Garcia Marquez தொண்ணூறு வயது முதிய ஆணையும், பதின்நான்கு வயது நிரம்பிய பதின்மப் பெண்ணையும் முக்கியப் பாத்திரங்களாய் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரதி ஞாயிறு தோறும், உள்ளூர் பத்திரிக்கையில் பத்திகள எழுதுகின்ற, திருமணம் என்று எதுவும் இதுவரை செய்யாத ஆணுக்கு, தனது தொண்ணூறாவது பிறந்த தினத்தில், தன்னுடைய பிறந்ததின...

Monday, November 14, 2005

கறுத்த பிரேம் கண்ணாடிக்குள்ளிலிருந்து நதியாய் அசைகின்றன விழிகள் ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில் நெஞ்சுதடவிய அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும் முதுகில் படரும் விரல்கள் கத்திகளாய் குத்திக்கொண்டிருந்த கடந்த காலம் தூர்ந்துபோக சிறகுகள் முளைக்கின்றன மனவெளி முழுதும் ஒரு பொழுது சப்வேயில் அழகிய காதற்காலம் துளித்துளியாய் கரைந்து கருஞ்சாம்பர் வானமானதையும் அதிலிருந்து முளைத்த துர்ச்சாபத்தேவதைகள் வருடங்கள் மீதேறி நிழ்ல்களாய்ப் பயமுறுத்தியதும் நீயறிவாயா...

ஆட்டுக்குட்டிகளும், உதிர்ந்த சில பழுப்பு இலைகளும்

Monday, October 24, 2005

-டிசே தமிழன் அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல் நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து...

Thursday, October 20, 2005

சாத்தானின் காற்று நள்ளிரவை சிலுவையில் அறைய அதிர்கிறது பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள் ஓடி ஒளித்த நட்சத்திரங்களில் ஒன்றில் தேவாலயத்தை விட்டுத்தப்பியோடிய ஜீசஸும் தஞ்சம் கேட்டிருக்கலாம் போர்வையை விலத்த ஏறியிறங்கும் மார்புக்குவட்டுக்குள் கடந்தகாலத்தின் துயரநதி உறைந்துநிற்பது தெரிகிறது தொலைவில் பைன்மரக்காட்டுக்குள் வைரங்களைக்காவிச் செல்லும் ஒநாய்கள் தென்படுகின்றன பனிப்புகாருடன் ஒநாய்களைப் பின் தொடரத்தொடங்கி ஏழாவது நிமிடமும் இருபத்தைந்தாவது...

கொழும்பு: மலரும் சில நினைவுகள்

Tuesday, October 11, 2005

கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு, பாடாசாலை, ரியூசன்,...