கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அகதி

Monday, January 08, 2007

பல்வேறு கனவுகள் உலாவித்திரிந்த வெளியில்
நானுமொரு மழலைக்கனவாயிருந்தேன்
கனவுகளுக்கு மொழியோ நிலமோ அடையாளங்களாவதில்லை
ஆதாமும் ஏவாளும் பிணைகையில்
கண்ட முதற்சாட்சியென கோபங்கொண்டான் சாத்தான்
தங்களுக்கான சுருக்குக்கயிறுகள்
மழலைகள் சொந்தம் கொண்டாடவிரும்பாத மொழியிலும் நிலத்திலும்
இரவுபகலின்றி தயாரிக்கப்படுவதாய்
வன்மத்துடன் துப்பாக்கிகளில் புகுந்து துரத்தத்தொடஙகினான் சாத்தான்
இவ்வாறாகத்தான்
என்னைப்போன்ற அகதிகளின் கதை
ஒரு தீவு தேசத்திலிருந்து ஆரம்பித்தது.


....................

நண்பர்களுக்கு,
திங்கள் காலை எழும்பி அஞ்சல்களை பார்வையிட்டபோது, நட்சத்திர வாழ்த்துக்கள வந்திருந்தன. நானறியாமலேயே நட்சத்திரமாக்கப்பட்டதை அறிந்தது உண்மையில் பேயறைந்தமாதிரியே எனக்கு இருந்தது (விடிகாலை வருகின்ற பிசாசுக்கு என்ன பெயர்?). அச்சமயம் மெஸஞ்சரில் இருந்த தமிழக நண்பரையும் வேறு யாரோ என்று நினைத்து வணக்கம் சொல்லி புதுவருட வாழ்த்துச்சொல்ல, நண்பரும் 'தலைவா, இன்னும் மப்புக் கலையவில்லையா?' என்று அன்போடு என் நிலையை கேட்டறிந்துகொண்டார். சடங்கு, சம்பிரதாயம் என்பவற்றில் நம்பிக்கையில்லை என்று அடிக்கடி எழுதிக்கொண்டிருப்பதைப் பரீட்சித்துப் பார்க்கத்தான் தமிழமணத்தார் இப்படி முறையான அறிவித்தல் கொடுக்காது தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அவரவர்க்கு ஆயிரம் சோலிகள் இருப்பது புரிந்தாலும் இவ்வாறு செயததது தனிப்பட்டவளவில் எனக்கு அவ்வளவு உவப்பானதில்லை என்று உரியவர்களிடம் குறிப்பிட்டுவிட்டே இதை எழுதுகின்றேன். புலம்பெயர்ந்து ஒரு தேசத்தில் அகதியாக இருப்பதாலே எனக்கான சுயஅறிமுகத்தையும் இல்லாமலே விட்டிருக்கின்றேன் :-). தொடர்ந்து இந்த வாரத்துக்கு தமிழ்மண நட்சத்திரத்துக்கான விதிகளுக்கமைய எழுதமுடியுமா தெரியவில்லை. இயன்றளவு முயற்சிக்கின்றேன்.

வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி நண்பர்களே.

13 comments:

இளங்கோ-டிசே said...

மேலே தந்த விளக்கம் என்னுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்கே தவிர, இதற்கான வாத-பிரதி வாதங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் முன்கூட்டியே கூறிவிடுகின்றேன் :-).

1/08/2007 06:32:00 PM
சினேகிதி said...

வாழ்த்துக்கள் டிஜே!!
தன்னிலை விளக்கம் எல்லாம் நல்லாத்தானிருக்கு.முறைப்படி உம்மளப் பற்றி எழுதும் கெரியா.விடிஞ்சு இவ்வளவு நேரமாகி இன்னமுமா மப்பு தெளியேல்ல? எல்லா அகதிகளுக்கும் சுய அடையாளம் இருக்கும் தானே??

1/08/2007 08:02:00 PM
வசந்தன்(Vasanthan) said...

அப்பாவியொருவனை ஒருக்கா அவசர நட்சத்திரமாக மாட்டிவிட்ட உமக்கு (ஞாபகம் இருக்கோ?) இதுவும் வேணும் இன்னும் வேணும்.

சினேகிதி,
"கெரியா" எண்டு எழுதி வேண்டிக்கட்டப் போறீரோ?
அல்வாய்க்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்க முடியுமெண்டு யோசிக்கிறன். ;-)

1/08/2007 11:15:00 PM
Kanags said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!

1/09/2007 12:14:00 AM
தமிழ்நதி said...

மாட்டிக்கொண்டீர்களா...? முன்னறிவித்தல் கொடுத்துவிட்டுத்தானே நட்சத்திரமாக்குவார்கள் என்றார்கள்.ம்... பார்ப்போம்.

1/09/2007 09:19:00 AM
Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

1/09/2007 10:02:00 AM
இளங்கோ-டிசே said...

சிநேகிதி, புதுவருடக் கொள்கையாய் சில மாதங்களாவது வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்துவது என்று ஒருவரிடம் உறுதிகொடுத்து, இப்ப் இடியப்ப உரலும் உதையும் பொங்கலுக்கு பரிசாக கிடைக்க்ப்போகின்றதோ என்று பயந்துகொண்டிருக்க.... அறிமுகமெல்லாம் வேண்டுமா :-(?
.......
வசந்தன் முற்ப்கல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள் :-)?
......
கனக்ஸ், நன்றி.
......
நதி, நண்பர்கள் அப்படித்தான் செய்கின்றவர்கள். எனினும் சிலவேளைகளின் ஆட்டத்தின் விதிமுறைகளையும் மீறவேண்டிய சந்தர்ப்பங்களும் வருந்தானே. அவ்வாறுதான் இதுவும் :-).

1/09/2007 10:11:00 AM
-/சுடலை மாடன்/- said...

விதிகளை மீறிய விண்மீன் என்றழைக்கலாமோ :-)

இதுவும் உங்கள் கனவில் வந்த வாரம் என்று கவிதைகளைப் பொழியுங்கள்!

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் டிசே!!

நன்றி - சொ. சங்கரபாண்டி

1/09/2007 10:34:00 AM
சிறில் அலெக்ஸ் said...

டி சே. நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

ஏனோ தமிழ்மணம் இதில் இடற்கிறதென்றே சொல்லவேண்டும். ஏனக்கும் நான் தகவல் வேண்டியபிறகும்கூட தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது.

இதை அவர்கள் விரைவில் சரிசெய்வார்கள் என நம்புவோமாக.

நீங்க வழக்கமா எழுதினாலே நட்சத்திரப் பதிவுகள்தானே.. அதனால பிரச்சனையில்ல

:)

1/09/2007 04:16:00 PM
செல்வநாயகி said...

எனக்கென்னவோ அறிவிப்பு வந்திருந்து, அதை நீங்கள் அசினுடன் உரையாடிக்கொண்டிருந்ததில் (கனவிலோ, கவிதையிலோ) கவனிக்கத் தவறியிருக்கலாம் என்றும்கூடத் தோன்றுகிறது:))

எப்படியிருப்பினும், உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இது நல்ல செய்திதான்:)) வாழ்த்துக்கள்!

1/09/2007 04:20:00 PM
மலைநாடான் said...

//எல்லா அகதிகளுக்கும் சுய அடையாளம் இருக்கும் தானே??//

அதைச் சொல்லுங்க சிநேகிதி.
டி.சே கதைய விட்டிட்டு, இந்தவாரத்தை களைகட்டச் செய்யும்.

1/09/2007 06:44:00 PM
Chandravathanaa said...

வாழ்த்துக்கள் டிசே

1/09/2007 06:49:00 PM
இளங்கோ-டிசே said...

அன்புக்கு நன்றி நண்பர்களே.
....
செல்வநாயகி: பாவனாவைத் தவறவிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன் :-).

1/10/2007 03:44:00 PM