
'...இவன் பிற்காலத்தில் தேவாரம் பாடுவதை நிறுத்திவிட்டு உதைபந்தாட்டத்தில் பிரபல்யம் அடைந்தவன். அவனுடைய இலட்சியம் எல்லாம் எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவையும் பிரயோகித்து பந்தை உயரத்துக்கு அடிப்பது. குறிப்பாக அது சூரியனிடம் போக வேண்டும்; குறைந்தபட்சம் அதை மறைக்க வேண்டும். பார்வையாளர்கள் எல்லாம் கழுத்தை முறித்து இரண்டு நிமிடம் மேலே...