-பாரதி வடிவேல்
இளங்கோ.. உங்களின் கதைகள் எல்லாவற்றையும் நேற்றுத்தான் படித்து முடித்தேன்..கதைகள் எனக்கு மிக மிக நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன்.. நான் வாசித்தமட்டில் "சக்கரவர்த்தியின் மட்டக்களப்பு சார்ந்த சிறுகதைகள் மற்றும் கசகறணம் ஆகியவை எங்களின் மட்டக்களப்பு பிரதேச வாசனை காரணமாக நெருக்கமாக இருந்தது..
இப்பொழுது உங்களின் கதைகளும் அதுவும் குறிப்பாக, தொகுப்பில் பின்னால் வரும் கதைகள் டொரண்டோவின் கிளப்..ரெஸ்டூரண்ட் ல கோப்பை கழுவிறது.. உச்சியிலிருந்து பார்க்கும் டவுன் டவுன் சன திரள் .. மற்றும் சப் வே இடங்கள். நவ் பத்திரிகையின் கடைசி பக்கங்கள் எல்லாம் மிகவும் எனக்கு நெருங்கிய தளங்கள்.. அதுமட்டுமல்ல எனக்கு வரும் எண்ணங்களும் பெரும்பாலும் உங்களின் எழுத்திலும் காணப்பட்டது மகிழ்ச்சியும் ஆச்சரியமும்.. நானும் சில வருடங்கள் முன்பு கோப்பை கழுவிக்கொண்டிருந்தபோதும், பக்டரியில் இயந்திரத்தனமாக வேலைசெய்து கொண்டிருந்தபோதும் இதெல்லாம் ஏன் இலக்கியத்தில நம்மட ஆக்கள் எழுதுவதில்லை யாராவது கண்டிப்பா எழுதவும் வேணும் எண்டு யோசிப்பேன்.. என்னுடைய வாசிப்புப் பரப்பும் குறைவு என்பதால் நான் அப்படி யாரும் எழுதி வாசிக்கவில்லையோ தெரியாது..
மற்றும் உங்களின் தொகுப்பில ஆரம்பத்தில் இருந்து கடைசி கதைகள் செல்ல செல்ல கதையின் அடர்த்தி கூடி செல்வதாயும் ஆழமான கதைகளாக ஆழம்கூடி செல்வதாகவும் எனது வாசிப்பறிவுக்கு உணரப்பட்டது.. "சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்து போனவன்" என்னை மிகவும் தூக்கிப்போட்ட ஒரு கதை..அதை வாசித்தததும் ஒரு குறும்படமாக் சிறப்பாக எடுக்கலாம் என்று ஒரு எண்ணமும் வந்தது..! கேங்ஸ்டர் பற்றிய கதையும் நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்தை நீங்க சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது..
மற்றும் இக்கதைகளெல்லாம் வாசிக்கும்போது உங்களின் சொந்த அனுபவம் என்று நினைத்தே என்னால் வாசிக்க முடிந்தது.. கதைசொல்லியையும் நூலாசிரியரையும் பிரித்துப்பார்க்கும் ஆழமான அறிவு எனக்கு இன்னும் வரவில்லையோ தெரியாது.. நான் உங்களோடு அதிகம் கதைத்ததில்லை.. அதிகமாக உங்களின் விமர்சன கட்டுரைகள் வாசிப்பேன்.. இப்பொழுது இந்த கதைத்தொகுப்பை 2 நாட்களாக ரக் ல வேலைக்கு கொண்டு சென்று வாசித்தபோது நீங்கள் என்னுடன் 2 நாட்களாக ரக்கில் கூட வந்து மனம் விட்டு கதைத்தது போல ஒரு உணர்வும்.. என் எண்ணங்களையொத்த ஒருவரை கண்டுபிடித்த திருப்தியும் வருகிறது..இனிமேல் உங்களின் இணையப் பதிவுகளில் உங்களின் சிறுகதைகளையும் வாசிக்க வேண்டும்.. தொடர்ந்தும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..!
'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' கதைகளின் தொகுப்பு குறித்து...
In சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்Friday, August 16, 2013
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment