
1.
தஸ்தயேவ்ஸ்கியின் அன்னாவையும், டால்ஸ்டாயின் ஸோஃபியாவையும்
புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலானது. அதேபோன்று தஸதயேவ்ஸ்கியும்,
டால்ஸ்டாயும் மதிப்பிடும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அதன்
பின்னணிகளையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். படைப்பாளிகளைப் போல,
அவர்களின் துணைகளினூடாக வரும் 'கதைகளும்' வாசகர்களைச் சலனமடையச்
செய்கின்றன. இவற்றில் பல படைப்பாளிகளுக்கு...