
ஆசி.கந்தராஜாவின் புதிய தொகுப்பான 'கள்ளக்கணக்கில்' பதின்மூன்று கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே வெளியான அவரின் சிறுகதைத் தொகுப்புக்களான 'பாவனை பேசலன்றி' (2000), 'உயரப்பறக்கும் காகங்கள் (2003) ஆகியவற்றிலிருந்து ஆறிற்கும் மேலான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இளவயதில் எழுதிவிட்டு, நீண்ட காலத்திற்கு எழுதாமல் இருந்து பிறகு மீண்டும் எழுதத்தொடங்கியமை...