
அமேஸன் பிரைமில் 'அசுரன்' வந்துவிட்டது என்பதறிந்து நேற்று நள்ளிரவிலேயே பார்க்கத் தொடங்கினேன்.. இதுவரை இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்காமலே தவிர்த்திருந்தேன். எனக்கான பார்வையை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காய் திரைப்பட விடயங்களில் நான் இவ்வாறு அடிக்கடி செய்வதுதான்.
அசுரனில் தனுஷின் நடிப்புப் பற்றியும், வெற்றிமாறனின்...