கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

துயரில் மூழ்கிய பொழுதுகள்

Wednesday, December 29, 2004

இறுதியாய் கிடைக்கும் செய்திகளின்படி வடகிழக்குப்பகுதியில் அம்பாறையில்தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. எம் கையே எமக்கு உதவி என்று அனுப்பப்படுகின்ற உதவிகள் கூட திசை திருப்பப்படுகின்ற செய்திகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போலவிருக்கிறது. ........ ஆரம்பத்தில் திருகோணமலைக்கு அனுப்பப்படவிருந்த நிவாரணப்பொதிகளுடன் இருந்த கப்பலை திசைதிருப்பிய முயற்சி இறுதியில் தமிழ் எம்பி ஒருவரால் முறியடிக்கப்பட்டது. இன்று கூட மட்டக்களப்பு,...

HELP!!!

Tuesday, December 28, 2004

people who are willing to help... http://www.geotamil.com/pathivukal/notice_tsunami_fund.html http://kavithai.yarl.net/archives/002482.html (thanx to pathivukal.com & EelaNatha...

யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?

Sunday, December 26, 2004

இயற்கை எங்களையும் பழிவாங்கியது. உயர்ந்துகொண்டிருக்கும் உயிரிழப்புக்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகம் என்ற செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிகழ்வு இரவில் நிகழ்ந்திருந்தால் இன்னும் அதிகமாய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அங்கிருந்து கதைப்பவர்கள் சொல்கிறார்கள். இலங்கை அரசாங்கமும், புலிகளும் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தி மீட்புப்பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். அதிகமான உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் சொல்லிக்கொண்டிருப்பதைவிட...

THE BLACK SUNDAY

Sunday, December 26, 2004

போர் ஓய்ந்த இந்தவேளையிலும், நிம்மதியாக இருக்கமுடியாதவென சீற்றம் கொண்ட இயற்கை நம்முறவுகளைப் பலிகொண்டபடியிருக்கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் தான் அதிகம் மனித இழப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கின்றன என்று வரும் செய்திகள் மிகுந்த கவலை தருகின்றது. இயற்கையை ஒருபொழுதில் தம் கடவுள்களாய் வழிபட்டவர்கள் நம் மூதாதையர். எல்லாம் போயிற்று போ. இந்தக்கணத்தில் சபிக்கிறேன் இயற்கையையும், இந்த ஞாயிறையும்....

தோணிகள் வரும் ஒரு மாலை

Saturday, December 25, 2004

இசைத்தட்டு வெளியீட்டு விழாவும், அரங்கினுள் குளிர் நுழைந்த கதையும் தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டு வெளியீட்டு விழா மாலை ஐந்து என்று போட்டிருந்தனர். நல்ல நித்திரையிலிருந்த நான் அரக்கப்பரக்க எழுந்து ஐந்து மணிக்கு கிட்டவாக விழா நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். இங்கே நடக்கும் விழாக்கள் எப்போதும் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் ஆரம்பிப்பது சம்பிரதாயம் என்றாலும், நான் இந்த விழாவிற்கு நேரத்திற்கு ஒரு காரணமிருந்தது. எனென்றால் முந்தி ஒருக்காய்...

SORRY

Friday, December 24, 2004

FRIENDS, I HAVE FOUND DIFFICULTIES IN MY BLOG. I AM NOT SURE WHAT IS HAPPENING HERE. MY POSTINGS ARE MESSED UP. I TRY TO FIX IT UP BEFORE TONIGHT. ...

ஜெயமோகனின் நாவல்கள்

Sunday, December 19, 2004

ஜெயமோகனின் நாவல்களில், 'ஏழாம் உலகம்' தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன். ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள்...

சொந்தப்புராணம் அல்லது அலம்பல்

Monday, December 13, 2004

வாழ்விலே பல விடயங்கள் காரணங்கள் என்னவென்று புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. அதற்காய் ஒருகணம் தரித்து நிற்பதுவும், பிறகு நீளநடப்பதுவும் வாழ்வியல் நியதி போல. எத்தனையோ மாற்றங்களை, ஏமாற்றங்களை கடந்துவந்தாலும், ஒரு சின்னதுன்பம் கூட என்னை ஒருகணம் அடித்துப்போட்டுவிட்டுத்தான் நகரும். இன்றைக்கு வேலைக்கு போய்விட்டு, பின்னேரம் வெளியே போவதற்காய் காரையெடுப்பம் என்டு போனால் கார் நின்ற space கிடக்கிறது, காரைத்தான் காணோம். ஒரு கணம் தலையைச் சுற்றி, பூமி...

அம்பையும் சிறுகதைகளும்

Friday, December 10, 2004

அம்பையின், உயிர்மையில் வெளிவந்த, கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி சிறுகதையை வாசித்தபோது நான் நீண்டகாலமாய் தேடிக்கொண்டிருந்த வினாவிற்கு சற்று விடை கிடைத்தாற்போலத் தெரிந்தது. எப்போதும் தேடல்,இருத்தல், இருத்தலின்மை/போதாமை என்ற சொற்களை ஆண்களாகிய நாங்கள் மட்டும் பாவித்து எழுதிக்கொண்டிருக்கும்போது இவைபற்றிய பெண்களின் அவதானங்கள் எப்படியிருக்கும் என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு. ............. சிறுகதையிலிருந்து சில பகுதிகள்... இருத்தல் இருத்தலின்மை...

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்-2

Tuesday, December 07, 2004

சில அவசரக்குறிப்புக்கள் கடந்த பதிவிற்கான கருத்தாய், சுகுமாரன் எழுதிய தற்கொலை பற்றிய கட்டுரை வாசித்தீர்களா என்று ஒரு நண்பர் எழுதியிருக்க, அந்தக்கட்டுரையை வாசிக்கவேண்டும் என்று ஆவல் உண்டாயிற்று. இங்கே ஒரேயொரு கடையில்தான் காலச்சுவடு, உயிர்மை விற்பனையாகிறது. எனக்கு அந்தக் கடைக்காரருடன் அவ்வளவு ஒத்துவராதது என்பதால் அங்கே போவது மிகவும் குறைவு. ஞாயிற்றுக்கிழமை ஒரு விடயம் காரணமாக அந்த இடத்திற்கருகில் போகவேண்டியிருந்தததால், நவம்பர் உயிர்மையும்,...

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்

Saturday, December 04, 2004

சில நாட்களுக்கு முன்னர், ஒரு பெண் தனது கணவன் மற்றும் மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார். நல்லவேளையாக இரண்டு பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுவிட்டன. சுதந்திரம், வசதிகள் என்று இன்னபிற விடயங்கள் கோலோச்சுகிற இடத்தில்தான் இப்படியான கொடூரமான விடயங்கள் அதிகம் நிகழ்கிறதோ என்ற எண்ணம் வந்தது. இந்தப்பெண்ணும், அடுத்தடுத்து பிள்ளைகள் பெற்றதால் வருகின்ற ஒரு உளவியல் வியாதிக்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று இப்போது காரணம் சொல்கிறார்கள்....