சுமதி ரூபனின் இந்தக்கதை, புலம்பெயர்தேசத்திலிருந்து எழுதப்பட்டதில் நான் அண்மையில் வாசித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்பேன். சுமதி ரூபன் புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களின் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர். சிறுகதைகள், கவிதைகள் எழுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகையாகவும், நல்லதொரு இயக்குநனராகவும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். வாழ்வதற்கான முயற்சிகளிலே தோற்றுக்கொண்டு, அதற்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில், இவ்வாறு...
மன்னிக்க வேண்டுகின்றேன்!
Sunday, January 23, 2005
பொடிச்சி மற்றும் நண்பர்களுக்கு,
நான் தவறு செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன். எழுதிய நண்பர் தனிப்பட்டமுறையில் மிகநெருக்கம் என்பதாலும், இதைப் பிரசுரிப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று தெரிந்தாலும், அது அறம் சேர்ந்த விடயம் என்பதால் தவறிழைத்திருப்பதாய்தான் தெரிகிறது. எனெனில் அவரோடு இப்போது சிறிதுகாலமாக தொடர்பில்லாததால் அவரின் அனுமதியைப் பெறமுடியவில்லை. இந்தக்கடிதத்தில் அவரது சில தனிப்பட்ட விபரங்களைத் தவிர்த்தே பிரசுரித்துள்ளேன். எனினும்...
'ம்'
Friday, January 21, 2005
நாவலிருந்து சில பகுதிகள்
"...இனி நான் எழுதப்போவதைப் படிக்கும்போது நீங்கள் சலிப்படையக்கூடும். சாவை வாசிப்பதால் நீங்கள் சலிப்படைகின்றீர்கள். நீங்கள் புத்தகத்தைத் தூக்கி வீசுவதாலோ இனி வரும் சில பக்கங்களை படிக்காமல் தள்ளிவிடுவதாலோ ஒரு காலத்தைக் கடந்து விடமுடியுமென்று நினைக்கின்றீர்களா? அந்தக்காலத்தில் திரும்பவும் திரும்பவும் 'ஜெயவாவோ' முழக்கம் எங்களைச் சூழ்ந்து எழுந்தது. சிங்களத்தில் வெறிக்கூச்சல் வெலிகட முழுவதும் பரவிற்று.
நீளமான விசில்கள்...
சாரு நிவேதிதா....இன்னும் கொஞ்சம்!
In வாசிப்புThursday, January 20, 2005
இன்று நண்பர்களுக்கு எழுதிய, நண்பர்களாய் எழுதப்பட்ட பழைய கடிதங்களை எனது கணணியின் பதுங்குகுழியிலிருந்து எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். பழைய கள்ளைப் போல பழைய கடிதங்களும் மிகவும் ருசியானவை என்று புரிந்தது. தற்செயலாய் நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பரொருவருடன் சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் குறித்து விவாதித்தபோது நண்பர் ஒருவர்(பெயர் குறிப்பிட பிரியமெனினும் அவரது தொடர்பு இப்போது இல்லாததால், அனுமதி வாங்கமுடியவில்லை) எழுதிய கடிதத்தின் பகுதி...
சாருநிவேதிதாவின் படைப்புக்கள்
In வாசிப்புTuesday, January 18, 2005
'என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு'
-in Zero Degree Novel
மேற்கூறப்பட்ட வார்த்தை எந்தளவிற்கு தமிழ்ச்சூழலிற்கு பொருந்துமோ தெரியாது. ஆனால்,அண்மைய கோணல் பக்கத்தில் கூட தனது படைப்புக்களில் அநேகமானவை சுயவரலாற்றுத்தன்மை கொண்டதே என்பதை சாருநிவேதிதாவே ஒப்புக்கொள்ளும்போது, சாருநிவேதிவாவின் படைப்புக்களை இந்த...
வாழ்விக்க வந்த தாயே வாழ்வழித்தாய்
Tuesday, January 11, 2005
இந்தப்பாடலை CTR (www.ctr24.com) வானொலியில் இணையத்தின் மூலம் கேட்டேன். ட்சூனாமியின் ஈழத்தில் (அல்லது புலம்பெயர்ந்த தேசத்தில்) வெளியிடப்பட்ட இசைத்தட்டிலிருந்து ஒலிபரப்பப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். மிகவும் உருக்கமான குரலிலும், வலிமையான வசனத்திலும் இந்தப் பாடல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் ட்சூனாமியின் நேரடியான பாதிப்பு இல்லாது, சொந்த தேசத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தை மறக்கடிக்கும் பல்வேறு சூழ்நிலைக்காரணிகள் இருக்கும்...
காலத்தின் முன் கையறு நிலையராய்...
Sunday, January 02, 2005
Tsunami - Aftermath
இறுதியாய் புலிகளின் சமாதானச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, வடகிழக்கில் கிட்டத்தட்ட 19000 மக்கள் இறந்தும், 11000 பேர் காணாமலும் போயிருக்கின்றனர். சூனாமியால் ஏற்பட்ட இழப்பு 30000ற்கு அதிகமாகிவிட்டது என்று தெரிகிறது. இதைவிட தெற்குப்பகுதியிலும் ஆயிரக்கணக்கில் மக்களை இழந்துவிட்டோம். இருபது வருட போரில் இறந்துபோனவர்களைப் போல அரைமடங்கான மக்களை ஒரு நாளில் இயற்கையினால் தொலைத்துவிட்ட கொடுமையை சென்ற ஆண்டு தன் கரிய...
Subscribe to:
Posts (Atom)