கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சு.வில்வரத்தினம் காலமானார்

Saturday, December 09, 2006

suVa
(1950-20006)

ஈழத்தின் முக்கிய படைப்பாளியான சு.வி என்று நண்பர்களால் அழைக்கப்படும் சு.வில்வரத்தினம் கொழும்பில் காலமானார் என்ற மின்னஞ்சல் பத்மநாப ஜயரிடமிருந்து இன்று காலை வந்திருந்தது. ஏ.ஜே.கனகரட்ன, சு.வில்வரத்தினம் என்று ஈழத்தில் இருக்கும் படைப்பாளிகளை நாம் தொடர்ந்து இழந்து கொண்டிருப்பது மிகவும் துயரமானது.

சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
(2)காற்றுவழிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
(3)காலத்துயர் (கவிதைத் தொகுதி)
(4)நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
(5) உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001)


பதின்மங்களில் 'காற்றுவழிக்கிராமத்தை' வாசித்தபோது மிகவும் பாதித்தது. ஊரூராய் அகதியாய் அலைந்து கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. இழந்துவந்த மண்ணின் துயரை மனமெங்கும் படியவிட்ட கவிதைகள் அதில் நிறைய இருந்தன. அதன் பாதிப்பில் ரியூசன் வகுப்புக்குப் போன ஆங்கில ஆசிரியரிடமும் ஆங்கிலத்தில் ஒரு கவிதையைக் மொழிபெயர்த்து தரக்கேட்டதாயும் நினைவு.

உயிர்த்தெழும் காலத்துக்காக' தொகுப்பில் - இதுவரை வந்த தொகுப்புகளின் அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கி வேறு புதிதாய் எழுதப்பட்ட கவிதைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கின்றேன். நூலகத்திற்கு சென்று இவரது தொகுப்புக்களை வாசிக்க முடியும். அண்மையில் வெளிவந்த 'காலம்' இதழ் -27ல் ஜெயமோகன் சு.வில்வரத்தினத்தின் கவிதைகளை முன்வைத்து தனது விமர்சனப்பார்வையை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கின்றார்.

...................................................................................
Dear friends,

A sad news.

Su. Vilvaratnam passed away today 5pm at Delmon Hospital Colombo.
He was suffering from kidney failure and liver problem.
Contact Mu ponnambalam 0115518464.

Nuhman
(....added later.....Thanx to Pathmanaba Iyer)
....................................................................................

4 comments:

Anonymous said...

படைப்பாளிகளின் மரணங்கள் எப்பொழுதும் துயரமாகவே அமைந்து விடுகின்றன.
ஆனாலும் அவர்களின் படைப்புகள் எம்மிடையே உயிர் வாழுகின்றன. சு.வில்வரத்தினத்தின் கவிதைகளில். வாசித்த காலங்களில் என்னை மிகவும் பாதித்த கவிதை....... அகதியாக..

வேற்றாகி நின்ற வெளி

வெளியாரின் வருகையோடு
வேர்கொண்ட வாழ்வையும் பிடுங்கிக் கொண்டு
மக்களெல்லாம் வெளியேறிய ஓரிரவிற்குப்பின்
விடியப் பார்த்தால்
வாழ்வெனும் வெள்ளம் வற்றிக்கிடந்த திடலாய்
கிராமம்.

முற்றத்துச்சூரியன்
முற்றத்து நிலாஇ
முற்றத்துக்காற்றென
வீட்டுமுற்றங்களுக்கே உரித்தான
வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக் கொண்டன.

வேலிகளை வெளியார் வெட்டிப் போட்டார்கள்.
வாசல் கதவுகளை உடைத்துப் போட்டார்கள்.
உள்ளத்தையெல்லாம் கொள்ளையடித்தார்கள்.
வீடுகள் திறந்தபடியே கிடந்தன.

திறந்த வாசல்களூடே நுழைந்த காற்று
கதவுகளை சாத்தியும்இ திறந்தும்இ தள்ளியும்
உள்ளோடியோடி எதையெதையோ முயன்று
உறவின்மை கண்டபின் தோற்றோடி
வேற்றாகி நின்ற வெளியிடைத் தோய்கிறது.

வெளிகொண்ட காற்று
வெளிகொண்ட நிலா
வெளியை வெறிக்கின்ற சூரியன்.

வெளியிடை வெறித்த பார்வையோடு நிற்கிறேன்
ஏதோ மோப்பம் பிடிக்குமாப்போல்
மெல்லனவந்த காற்று
விலகிச் செல்கிறது ஒரு வேற்றானைப் போல.

விழிகளைப் பெயர்க்கிறேன்
வேற்றாம்பார்வை என்னிலும் தொற்றியதோ?
விலகல
மெல்ல விலகல்; மேலும் விலகல்.
விட்டு நீங்கும் கப்பற்துறை வரையும்
விலகி வந்தாயிற்று கடைசியாய்.

காற்று மோப்பம் பிடித்தது சரிதான்.

இதோ கப்பல் நகர்கிறது
கனத்துக கிடக்கும் இதயச்சுமையையும் தாங்கியவாறே.

விலகிச் செல்லும் துறைமுகம்
வழியனுப்பவும் வாராதிருந்த முதியவரின் சோகத்தை
அப்பிக் கிடந்ததென.

தூரத்தே
புகார் மூட்டமெனத் தெரியும் பனைகளுக்கு அப்பால்
வேற்றாகி விண்ணாகி நின்ற வெளியுள்
குமைகிறது காற்று

12/09/2006 11:33:00 AM
கானா பிரபா said...

-அன்னாருக்கு எம் அஞ்சலிகள், காலமறிந்த பதிவுக்கு நன்றி டி.சே

12/09/2006 06:10:00 PM
Kanags said...

மறைந்த கவிஞர் சு.வி. அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

12/09/2006 06:46:00 PM
Dr. Manikandan.G said...

வில்வரத்தினத்தின் வரியைப் போலவே

"ஒற்றை மனுவறியா" சூரியனைப் போலவே திகைத்து
பகிர்கிறேன் சூனியத்தை/சோகத்தை.....

மணிகண்டன்

12/12/2006 01:35:00 AM