
படைப்பாளிகள் பலரை முதலில் அவர்களின் படைப்புக்களை வாசித்து
அறிமுகமாகித்தான், பின் அவர்கள் யாரெனத் தேடிப் பார்த்திருக்கின்றேன்.
விதிவிலக்காய் அம்பையை அறிந்துகொண்டது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில்
வாசித்த காலச்சுவடின் நேர்காணல் ஒன்றின் மூலமாக. முன்னட்டையே இல்லாத
காலச்சுவடை கண்டதும் வாசித்ததும் ஒரு தற்செயலான நிகழ்வு. ஆனால் முதன்முதலாக
வாசித்த காலச்சுவடும், அம்பையின்...