
-புதிய சில கவிதைகள் பற்றிய ஒரு சுருக்கமான வாசிப்பு-
கவிதைகள் எழுதுவதோடல்லாது, கவிதை மனோநிலையுடனும் எப்போதும் இருந்த ஒருவராக திருமாவளவனை
நான் நினைவுகொள்கின்றேன். தனது நாற்பதுகளின் பின்
இலக்கிய உலகில் நுழைந்த திருமாவளவன், மிகக் குறுகிய காலத்தில் நிறையக் கவிதைகளை எழுதி, தனக்கான கவனத்தை ஈர்த்த ஒரு புலம்பெயர் கவிஞர். ஈழக்கவிஞர் என்றோ அல்லது புலம்பெயர் கவிஞர்...