கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாவல்-திரைப்படம்-காதல் - மித்திரன்

Friday, February 21, 2020


-மித்திரன் வரதன்

நிதானமா வாசிக்க கூடியவர்கள் மட்டும் வாசிக்கவும். ஏனையவர்களுக்கு இது ஒரு சாதாரண அலட்டலாகவே இருக்கும்.

எல்லோரும் போலவே நானும் கடந்த 1 வருடமாய் கைத்தொலைபேசிக்குள் முடங்கி விட்டேன். என்னுடைய வாசிப்பு பழக்கம் மரித்து போய் விட்டது. மரித்தது அதுமட்டும் அல்ல என் ரசனைகளும்,கிளர்ச்சிகளும் தான். என்ன ஒரு பெரிய விடயத்தையும் ஏனையவர்கள் போலவே சிறு விரல் நகர்த்தலில் என்னால் கடந்துவிட முடியும். இவ்வாறிருக்கயில் எங்கிருந்து துளிர்ப்பது ரசனையும்,கிளர்ச்சியும். இப்ப இப்பதிவு எழுதுகையில் கூட அடிக்கடி மனம் அலை பாயுது.

இவ்வாறிருக்கயில் நேற்று பின்னிரவில் பழமையான என்னை திருத்தி எடுக்க ஒரு நாவல் வாசிப்போம் என முடிவெடுத்தேன். விடியகாலமையே வெள்ளனவா எழும்பி phone ல data off பண்ணி போட்டு அப்பரிண்ட புத்தக இறாக்கயை கிளறினேன். இன்றுவரை நான் வாசிக்காத புத்தகங்கள் தட்டுப்படுகின்றனவா என தேடினேன். அங்கிருந்த பல புத்தகங்கள் நான் வாசித்திருக்கவில்லை. சில என் விருப்ப பட்டியலில் இருந்ததால் பலமுறை வாசித்திருந்தேன். இருந்தும் என் மனம் இதிலொன்றும் என் மனம் ஒன்றவில்லை. தொடர்ந்து தேடினேன். அப்பொழுது புதிய மட்டை உடன் புத்தம் புதிதாக ஒரு புத்தகம் சிக்கியது.

செரி இதையே வாசிப்போம் என சலிப்புடன் mind fix பண்ணிக்கொண்டேன். ஆனால் சம்பவம் வேறாயிருந்தது. முதல் அத்தியாயம் தாண்டமுதல் புத்தகத்தின் ஈர்ப்பு என் mind fix ஐ உடைத்தெறிந்திருந்தது.

ட நாவலின் பெயரை குறிப்பிடவேயில்லை பாருங்களேன். நாவலின் பெயர் "மெக்சிக்கோ". நாவலாசிரியர் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இளங்கோ என்பவர். மேலும் இந் நாவல் "பிரபஞ்சன் நினைவு பரிசு" ஐ 2019 ல் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இளங்கோ இயல்பிலேயே பயண விரும்பியாகவும்,சிறந்த வாசகனாகவும் இருக்கிறார் என்பது நாவல் வழியாக தெரிந்தாலும், நான் உணர்ந்ததை என் அப்பரிடம் கேட்டு உறுதி படுத்தி கொண்டேன். அவர் அவ்வாறுதானிருந்தார்.

சரி விடயத்திற்கு வருவோம் இங்கு நான் நாவல் பற்றி விலாவாரியாக குறிப்பிட போவதில்லை. ஏனென்றால் எனக்கு அடிப்படையிலேயே spoil பண்ணுவது எனக்கு பிடிக்காது.

இந்த நாவல் ஒரு இளைஞனின் ஒரு பயண குறிப்பென்றும் சொல்லலாம். இல்லை அவன் மனக்கிடப்பென்றும் சொல்லலாம் என்ன என்று நீங்கள் வாசித்து முடிவு செய்யுங்கள். ஆனால் அக்குறிப்பை கனகச்சிதமாக வாசகனின் உணர்வுகளுடன் ஒன்ற செய்யும் விதமாக நாவலை செதுக்கியத்தில் தான் இளங்கோ எனும் சிற்பி வெற்றி கண்டுள்ளான்.

செரி இந் நாவலால் நான் என்ன உணர்ந்தேன்??

நான் உணர்ந்து இதை தான். நான் ஒரு திரைப்பட பித்தன். 1 நாளில் 1 படமாவது பார்க்காமல் படுப்பது கிடையாது. ஆனாலும் நாவலா, திரைப்படமா என் உணர்வு படர்கைக்கு விஸ்தீரணமான எல்லையை நிர்ணயிப்பது எனும் போட்டியில் நாவல்களே முன்நிலையை தமதாக்கி கொண்டிருக்கின்றன.
ஆனாலும் நான் நாவல் பித்தன் இல்லை. உதாரணத்திற்கு காதல் என்னும் உணர்வை எடுத்து கொள்வோம். பல திரைப்படங்கள் பல பாணியில் என் உணர்வுகளை கிளர்த்தி சென்றிருக்கின்றன. உதாரணமாக கற்றது தமிழ், note book, blue is warmest colour,ராவணன்.... இப்படி பல. சின்னஞ்சிறிய காடசிகள் கூட என்னை கவர்ந்திழுத்த படங்களும் இதிலுண்டு. ஆனால் இவை அனைத்தும் காட்சிஅமைப்பு எனும் ஒற்றை சொல்லினால் என் கற்பனையை மட்டுப்படுத்திவிட்டன.

ஆனால் நாவல்கள் அவ்வாறில்லை. நான் வாசித்த காதல் நாவல்கள் பல ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்களே. அதில் ஒலேஷியா,ஆஸ்யா, வசந்தகால வெள்ளம்,செம்மணி வளையல் போன்றன இன்றும் என்மனத்தில் கிளர்ச்சி ஊட்ட கூடியன. இக்களத்தில் எனக்கான கதா நாயகிகள் என்னால் எனக்கு பிடித்தமான முறையில் உருவாக்க பட்டார்கள். ஏன் அருவருப்பான விடயங்கள் கூட எனக்கு அருவருப்பாக உள்ளவாறே உருவாக்க பட்டன. இவ்வாறான விடயங்கள் திரைப்படங்களில் இருப்பதில்லை. பிடிக்குதோ இல்லையோ அவள் தான் நாயகி அவன்தான் hero, அவன்தான் வில்லன். இதனாலேயே நாவல்கள் என்றும் கிளர்ச்சி ஊட்டக்கூடியன.

அவ்வாறான நாவல்களில் ஒன்றாய் இன்று என்பட்டியலில் இளங்கோவின் மெக்சிக்கோவும் எதேச்சையாய் நுழைந்து விட்டது.
மறுபடியும் எங்கட பெடியலட மொழில சொல்றன் நாவல் "வேற மட்டம்" வாசிச்சு முடிய கெலிச்சு போவியள்.
சொல்ல வந்ததை மறந்துவிட்டேன் என் பழமையானவன் இன்று மாலை மெக்சிக்கோவில் கிளர்ந்தெழுந்து விட்டான்.


நன்றி: மித்திரன் வரதன்0 comments: