தமிழில்: இளங்கோ
******
மேலும் மேலும்
இளம் பெண்களிடம் இருந்து
நிறையக் கடிதங்களைப் பெற்றபடி இருக்கிறேன்
"நான் திடகாத்திரமான 19 வயதுக்காரி
வேலையில் இருக்கும்போது
உங்கள் எழுத்து
என்னைப் பாலியல் நோக்கித் திரும்புகிறது
நானொரு நல்ல பணியாளும் காரியதரிசியும்;
உங்கள் பக்கம் ஒருபோதும் வரப்போவதில்லை
இத்துடன் எனது புகைப்படத்தை அனுப்ப விரும்புகிறேன்
ஆனால் அது அவ்வளவு மலினமாக இருக்கும் என..."
"எனக்கு வயது 21
நல்ல உயரமும் கவர்ச்சியானவளும் கூட
உங்கள் நூல்களை வாசித்திருக்கின்றேன்
நான் ஒரு வக்கீலாக வேலை பார்க்கிறேன்
எப்போதாவது நீங்கள் என் நகருக்கு வருவீர்களென்றால்
தயவுசெய்து அழைக்கவும்."
"நான் உங்களை
ருவடோரில் கவிதை வாசிப்பை
நீங்கள் முடித்த இரவில்
சந்தித்தது நினைவிருக்கின்றதா
நீங்கள் தொலைபேசியில் அழைத்தபோது
பதிலளித்தவனின் குரல்
அவ்வளவு கடுமையாக இருந்ததென்று நீங்கள் சொன்னவனைத்தான்
நான் திருமணம் செய்திருந்தேன்.
இப்போது விவாகரத்து பெற்றுவிட்டேன்
எனக்கொரு இரண்டு வயது மகள் இருக்கிறாள்
நான் இப்போது
இசை உலகினில் இல்லை
ஆனால் அதையிட்டு ஏங்குகின்றேன்
உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்.."
"நான் உங்களது
அனைத்து நூல்களையும் வாசித்துவிட்டேன்
எனக்கு 23 வயது
என்னிடம் அவ்வளவு நல்ல மார்பகங்கள் இல்லை
ஆனால் அருமையான கால்கள் இருக்கின்றன
உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் சிலவாயினும்
அது மிகவும் பெறுமதியாக எனக்கு இருக்கும்..."
பெண்களே
தயவு செய்து
உங்கள் உடல்களையும்
உங்கள் வாழ்வையும்
அதை அனுபவிக்கப் பொருத்தமான
இளைஞர்களிடம் கொடுங்கள்
அத்துடன்
சகிக்கமுடியாத,
அலுப்பான,
அர்த்தமேயில்லாத நரகத்தைக் கொண்டுவரபோகும்
உங்களை நான் ஒருபோதும் என் வாழ்வில் வரவேற்கப்போவதில்லை
மேலும்
படுக்கையிலும்
அதற்கு அப்பாலும்
நீங்கள் மகிழ்வதற்கான
என் வாழ்த்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்
ஆனால் என் வாழ்க்கையில் அல்ல.
மிக்க நன்றி.
******


0 comments:
Post a Comment