
கடந்தவருடம் உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத்தின் இறுதியாட்டம் முடிந்த அடுத்த நாள் கேரளாவிற்கு விமானம் எடுத்திருந்தேன் நான் உலாத்தித் திரிந்த பாதை எங்கினும் கால்பந்தாட்டத்தை கேரளா எப்படிக் கொண்டாடியது என்பதற்கான எல்லா அடையாளங்களும் இருந்தன. ஆர்ஜெண்டீனா அணியும், பிரேஸில் அணியும் இல்லாது ஒரு தெருச்சந்தியும் இல்லாததுபோல 'பிளெக்ஸ்'கள் நீலமும், மஞ்சளுமாக எங்கும்...