சென்னை புத்தகக் கண்காட்சி என்பது தொலைவில் இருப்பவர்க்கு கிளர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அது இன்னொருவகையில் ஒரு அபத்தமான அரங்கில் நாங்கள் இருக்கின்றோம் என்ற உணர்வையும் நேரில் போகும்போது தரக்கூடியது. வாசிக்கவும், எழுதவும் விரும்பும் எனக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதென்பது பெருங்கனவாக ஒருகாலத்தில் இருந்தது. 5 வருடங்களுக்கு முன் அது முதன்முதலில் சாத்தியமாகியபோது கனவு நடந்தேறிய இதம் இருந்தாலும், அடிக்கடி கண்காட்சிக்கு செல்லவேண்டுமென்ற...
இயற்கையின் உபாசகர்கள்
In அனுபவப்புனைவு, In பயணம்Wednesday, May 27, 2020

எல்லவில் இருக்கும் மலையில் (Ella Rock) ஏறுவது அவ்வளவு எளிதானதல்ல என்பது ஏறும்போதுதான் தெரிந்தது. அதற்கு முதல் எல்ல இரெயின் ஸ்ரேஷனின் தண்டவாளத்தால் நடந்து அடுத்த ஸ்ரேஷனான கிதல் எல்ல வரை 3 கிலோமீற்றர்கள் நடக்கவேண்டும். இடையில் ரெயின் வருகின்றதா என அவதானமாக நடக்கவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை அள்ளிக்கொண்டு போய்விடும்.
இதன்பிறகும் ஒரு 5 கிலோமீற்றர்கள் தேயிலைத்...
9 grader nord - இசைக்குழு
In இசைTuesday, May 26, 2020

9 grader nord (நி கிராதர் நூர்) என்பது நமது தமிழ்ப் பிள்ளைகள் முதன்மையாக இருக்கும் ஓர் இசைக்குழு (band). எப்போதும் தனித்துவமான திசைகளைக் கலைகளில் தேடுபவர்களை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்கள் தமக்கான பிரபல்யம், பொருளாதார வசதிகள் பற்றி அவ்வளவு கவலைப்படாது தம் இயல்பில் கலையில் ஊறியிருப்பார்கள். மாயா (M.I.A),அப்படித்தான் ஒருகாலத்தில் "Galang" என்ற single...
கியூபாப் பயணம்
In பயணம்Sunday, May 24, 2020

கியூபாவில் புரட்சி நடந்து இன்று கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் ஆகப் போகின்றதென்றாலும், கியூபா அதன் தூய்மையான கடற்கரைகளுக்காகவும், ஹாவானாவிலிருக்கும் புராதன நகருக்காகவும் இன்று அதிகம் நினைவு கொள்ளப்படுகின்றது. ஸ்பானியக் கலாச்சாரத்திற்குரிய இசையும், உணவும், மதுவும் கியூபாவின் எந்தத் தெருவிற்குள் நுழைந்தாலும் நாம் எளிதாக அவதானிக்க முடியும்.
கியூபாப் புரட்சியின்போது...
சேர்ஜியோ (Sergio)
In திரைமொழிThursday, May 21, 2020

பாரிஸில் 1968 இல் மாணவர் புரட்சி நடக்கும்போது முன்னணிப் போராட்டக்காராக இருந்த பிரேஸிலியர் ஒருவரை வாழ்க்கை எங்கெங்கோ சுழற்றியடிக்கிறது. பிறகு ஐ.நா.சபையில் இணைந்து பல்வேறு நாடுகளில் அதன் பிரதிநிதியாகப் பயணிக்கின்றார். கம்போடியாவின் -கம்பூச்சியா கம்யூனிஸ்ட்டுக்களோடு- ஆபத்து நிறைந்த சாகசங்கள் செய்து, போரின் நிமித்தம் புலம்பெயர்ந்த அகதிகளை மீண்டும் சொந்த...
அசோகமித்திரனின் 'தண்ணீர்'
In வாசிப்புTuesday, May 12, 2020

எழுதும் மொழியைச் சிரமமுமில்லாமலும், கிளிஷே இல்லாமலும் பயன்படுத்த எல்லோராலும் முடிவதில்லை. மொழியைக் கஷ்டப்படுத்தாது பாவிப்பதென்பது, நீண்ட வாக்கியங்களைப் பாவிக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல. அது நீண்டதோ, சுருங்கியதோ சொல்லும் மொழியில் குழப்பங்கள் இல்லாது சொல்லிச் செல்வதைக் குறிப்பிடுகிறேன். அதேபோல கிளிஷே என்பது தேய்வழக்குகள் பற்றியது. சொல்வளம் எமக்குச் சுருங்கியதாக...
சில புத்தகங்கள், சில அவதானங்கள்
In வாசிப்புSaturday, May 09, 2020

இந்த வருடம் வாசிப்பின் உற்சாகமான ஆண்டாகத் தொடங்கியிருக்கின்றது. முக்கியமாய் ஈழத்தவர் பலரின் நூல்களை வாசித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. விமர்சனங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு உற்சாகப்படுத்தல்களும் அவசியமானது. இவை இந்த படைப்பாளிகள் தொடர்ந்து எழுத்து மனோநிலையுடன் இருந்து எழுத அவர்களை உந்தித்தள்ளும். சிறுகதைத் தொகுப்பாயின், மூன்று நான்கு...
Subscribe to:
Posts (Atom)