
தலித்திய அரசியலை வாசித்துவிட்டு அடுத்து வாசிக்கத் தொடங்கியது ரெஜி டெப்ரேவின் 'சே குவேராவின் கொரில்லா யுத்தம்'. இது சேயின் இறுதிக்காலங்களில் பொலிவியாவில் அவரோடிருந்த ரெஜி டெப்ரோ எழுதிய நூலாகும். இதற்கு முன்னர்தான் சே (ரெஜியினது பங்களிப்பும் உண்டு) எழுதிய 'கெரில்லா யுத்தம்' என்ற நூல் வெளிவந்திருந்தது. அது பல கெரில்லா அமைப்புக்களுக்கான கையேடாகவும் இருந்திருக்கின்றது/இருக்கின்றது. ...