
1.சென்ற வாரம் ஒரு நண்பர் அவர் சிறிதளவில் பங்களிப்புச் செய்துகொண்டிருக்கும் ஒரு திரைப்படம் பற்றி கூறிக் கொண்டிருந்தார். 'இது ஒரு நடுநிலையான திரைப்படம், அரசு X இயக்கம் என்கின்ற இரு தரப்பையும் விமர்சிக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார். எனக்கு இவ்வாறான 'நடுநிலை'மைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை, ஒரு படைப்பு அது எடுத்துக்கொள்ளும் களத்துக்கு உண்மையாகவும்/genuine...