கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 63

Sunday, December 29, 2024

 எப்போது வெளிவரும் என நள்ளிரவில் இருந்து எதிர்பார்த்து முழுவதையும் பார்த்து முடித்துவிட்டேன். எட்டு எபிசோட்டுகள், ஒவ்வொன்றும் ஒரு மணித்தியாலம். எங்கிருந்து தொடங்குவது, எதை எழுதுவது என்ற தவிப்பு இருந்தாலும் மனது நிறைந்து நெகிழ்ச்சியில் ததும்புகின்றது. காபோ என்ன இருந்தாலும் நீங்கள் எழுத்தில் ஒரு 'மாஸ்டர்'தான் என அவரைத் தோளணைக்கத் தோன்றுகின்றது. இது முழுதான...

கார்காலக் குறிப்புகள் - 62

Sunday, December 29, 2024

 நான் பல்கலைக்கழகம் முடித்து, முதன்முதலாக முழுநேர வேலையின் களத்துக்குள் குதித்தபோது, அந்த நிறுவனத்தில் ஒரு தமிழ்ப்பெண்ணும் வேலை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் எனக்குள் இருக்கும் ஆன்மீகத் தேடலை அறிந்து, பைபிளில் இருந்து தினம் ஒரு கதையை அனுப்பிவைப்பார். காலையில் வந்து கணனியைத் திறந்தால் அந்த நற்செய்திதான் முதலில் மெயில்பெட்டியில் பிரகாசிக்கும். அப்படித்தான்...

கார்காலக் குறிப்புகள் - 61

Thursday, December 26, 2024

 மு.பொன்னம்பலம் காலமானபோது நண்பரொருவர் சஞ்சிகைக்கு அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரச் சொல்லியிருந்தார். நான் முகநூலில் எழுதிய மு.பொவுக்கான அஞ்சலிக் குறிப்பை நண்பர் வாசித்திருந்தார். இனி வருங்காலத்தில் மு.பொ தனித்து நிற்பாரா அல்லது அவரின் சகோதரரான மு.தளையசிங்கத்தின் ஆளுமைக்குள் அடங்கிப் போய்விடுகின்றவராக ஆகிவிடுவாரா என்று எனது அஞ்சலிக் குறிப்பை முடித்திருந்தேன். நண்பருக்கும் அந்தப் புள்ளி பிடித்திருந்ததால், அதை விரித்து விமர்சனபூர்வமாக...

கார்காலக் குறிப்புகள் - 60

Monday, December 23, 2024

இன்று நாம் அனுபவிக்கும் 'சுதந்திரம்' எளிதில் கிடைத்ததல்ல. அதற்கான தியாகங்களும், போராட்டங்களும், தோல்விகளும் இல்லாது பல விடயங்கள் நமக்குக் கிடைத்திருக்காது. பெண்கள் அவர்கள் பிறந்த பாலினத்துக்காகவே காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்தத் தடைகளைத் தகர்த்து வந்துகொண்டிருக்கும் பெண்களின் வரலாறு என்பது மிக நெடியது. பாலின வேறுபாட்டை (Gender discrimination)...

மு.பொன்னம்பலம்

Sunday, December 22, 2024

  1.மு.பொ எனப்படும் மு.பொன்னம்பலம் காலமாகிவிட்டார். மு.பொவின் மிகக் குறைவான நூல்களை நான் வாசித்ததிருக்கின்றேன். 'பொறியில் அகப்பட்ட தேசம்', சூத்திரர் வருகை' போன்ற கவிதைத் தொகுப்புக்களையும், 'கடலும் கரையும்', 'முடிந்து போன தசையாடல் பற்றிய கதைகள்' போன்ற கதைத் தொகுப்புக்களை வாசித்தபோதும், அவரின் புனைவுகளோ/கவிதைகளோ என்னைப் பெரிதும் ஈர்த்ததில்லை. அவரை ஒரு சிறந்த விமர்சகர் என்பதாகவே என் வாசிப்பில் அடையாளப்படுத்த விரும்புகின்றேன். அது...

கார்காலக் குறிப்புகள் - 59

Tuesday, December 17, 2024

 சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைதூர நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது, 'உங்களுக்குத் தெரியுமா? எனது நண்பன் ஒருவன் உங்களை அப்படிக் காதலித்தான்' என்றார். எனக்கு அது ஓர் ஆச்சரியமாக இருந்தது. காதலால் அல்ல. நானே அப்படி எத்தனை பேரை நேசித்திருக்கின்றேன். இப்படி என்னைப் போன்ற ஒருவனைக் கூட, என் எழுத்துக்களின் வழி ஒருவர் ஆழமாக காதலிக்க முடியுமா என்பதுதான் கொஞ்சம்...

இலங்கை அரசியலை பின்-நவீனத்துவ நிலவரத்தினூடாகப் புரிந்துகொள்ளல்!

Monday, December 16, 2024

 1.இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் சென்றபோது சில வருடங்களுக்கு முன் 'அரகலய' போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. அதன் உச்சத்தில் அன்றைய ராஜபக்‌ஷ அரசு துடைத்தெறியப்பட்டது. இலங்கையின் முழு அதிகாரங்களும் பெற்ற ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்‌ஷ இலங்கையை விட்டுத் தப்பியோடியதும், வெவ்வேறு நாடுகளில் தலைமறைவாகப் பதுங்கி இருந்ததும் அண்மைக்கால இலங்கையின்...

அத்திப்பூ குறிப்புகள்

Sunday, December 01, 2024

 1. அமெரிக்கத் தேர்தல்அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிட்டது. யார் வென்றுவிட்டார் எனது அனைவர்க்கும் தெரியும். அடுத்த வருடம் கனடாவிலும் தேர்தல் இருக்கின்றது. அதிலும் வலதுசாரிச் சார்புள்ள மிதவாதக் கட்சி (Conservative) வெல்லவே அதிகம் சாத்தியமிருக்கின்றது.இப்போது அமெரிக்கத் தேர்தல் குறித்து எழுத வரவில்லை. அமெரிக்காவில் டிரம்ப் வென்றவுடன், ஒருவர் அது கறுப்பின மக்களின்...

கார்காலக் குறிப்புகள் - 58

Wednesday, November 20, 2024

 காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தொடக்கத்தில் சில நூல்களை எழுதிவிட்டு எழுத்தின் உறங்குநிலைக்குப் போகின்றார். அப்போதுதான் மெக்ஸிக்கோவில் அவர் யுவான் ரூல்ஃபோவின் (Juan Rulfo), பெட்ரோ பராமோ நூலை வாசிக்கின்றார். இந்நூலின் ஈர்ப்பினால் மார்க்வெஸ் அந்த நாவலை ஓர் இரவில் இரண்டுமுறை வாசிக்கின்றார். பிற்காலத்தில் என்னால் முன்னுரையிலிருந்து இந்நாவலின் எல்லாப் பக்கங்களையும்...

இலங்கையில் தமிழ்ப் பெளத்தம்

Tuesday, November 19, 2024

1. இலங்கையில் எப்போதிருந்து சிங்களப் பெளத்தம் இருந்ததோ அப்போதிருந்தே தமிழ்ப் பெளத்தமும் இருந்தது என்கின்ற ஆய்வுக்கட்டுரைகள் இப்போது நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பெளத்தம் இந்தியாவில் அசோகர் காலத்தில் அவரின் மகனான மகிந்தரால் கொண்டு வரப்பட்டது என்று 'மகாவம்சம்' கூறுகின்றது. மகாவம்சத்தின்படி சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில்...