
அண்மையில் இன்னொரு நகருக்கு ஒரு நிகழ்வுக்காகப் பயணித்தபோது தற்செயலாக நண்பரொருவரைச் சந்தித்திருந்தேன். சில வருடங்களுக்கும் முன் அவர் ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்திருந்தார். அவரோடு சமகால புலம்பெயர்/ஈழத்துத் திரைப்பட முயற்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். புலம்பெயர் இலக்கியம் போல, புலம்பெயர் திரைப்பட முயற்சிகளும் தொடக்கத்தில் தந்த நம்பிக்கை போலவன்றி...