
ஓர் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கின்றீர்கள். அந்த எழுத்து உங்களை அப்படி வசீகரிக்கின்றது. நல்லதொரு படைப்பைத் தந்த அந்த எழுத்தாளருக்கு நன்றி சொல்ல விரும்பும்போது நீங்கள் என்ன செய்வீர்கள். நான் சங்கரியின் நாவலை வாசித்து முடித்த மகிழ்ச்சியில், அவரின் எழுத்துக்களில் எதையாவது தமிழாக்க வேண்டுமென விரும்பினேன். அதுவே இந்தக் கட்டுரை. சங்கரி தனது நாவல்கள், தான்...